பொது செய்தி

இந்தியா

காங்., முன்னாள் எம்.பி.,யிடம் மன்னிப்பு கேட்டார் வினோத் ராய்

Added : அக் 28, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி :'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், காங்., முன்னாள் எம்.பி., சஞ்சய் நிருபமிடம், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிஉள்ளார்.கடந்த 2007ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்தது.
காங்., முன்னாள் எம்.பி., மன்னிப்பு  வினோத் ராய்

புதுடில்லி :'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், காங்., முன்னாள் எம்.பி., சஞ்சய் நிருபமிடம், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிஉள்ளார்.
கடந்த 2007ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை அளித்தது. அப்போது, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக இருந்தவர் வினோத் ராய். இவர் ஓய்வு பெற்ற பின், 2014ல் ஒரு புத்தகம் வெளியிட்டார்.


latest tamil news



அதில், '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்து, தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சேர்க்க வேண்டாம்' என, காங்., - எம்.பி., சஞ்சய் நிருபம் வலியுறுத்தினார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து வினோத் ராய் மீது, சஞ்சய் நிருபம் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் வினோத் ராய் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில் கூறப்பட்டுள்ள தாவது:பார்லி., கூட்டுக் குழு கூட்டங்களில் சந்தித்த போது, தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் மன்மோகன் சிங் பெயரை சேர்க்க வேண்டாம் என, சஞ்சய் நிருபம் எனக்கு அழுத்தம் கொடுத்ததாக, கவனக்குறைவாகவும், தவறாகவும் தெரிவித்து விட்டேன்.
அது குறித்து, பத்திரிகை, 'டிவி'க்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் தவறு. என்னால் சஞ்சய் நிருபம், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் அடைந்த வேதனையை உணர்ந்து உள்ளேன்.அதனால் அவர்கள் அனைவரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். என் மன்னிப்பை சஞ்சய் நிருபம் ஏற்று, இந்த வழக்கை முடிக்க கோருகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், வழக்கை முடித்து வைப்பதாக டில்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கிடையே, ''என்னிடம் மட்டும் மன்னிப்பு கேட்டால் போதாது; 2ஜி முறைகேடு குறித்து தவறாக கூறியதற்காக, நாட்டு மக்களிடமும் வினோத் ராய் மன்னிப்பு கோர வேண்டும்,'' என, சஞ்சய்நிருபம் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
29-அக்-202117:47:11 IST Report Abuse
raja 2G கேஸ் ஆரமித்து வைத்ததே அப்போது ஆண்ட தோழமை காங்கிரஸ் அரசுதான் நேற்று பெய்த மழை யில் இன்று முளைத்த உடன்பிறப்புகலே ... இது என்னமோ பிஜேபி ஆட்சில் செய்தது போல் உளறல் கருத்துக்கள்.... வரலாறு தெரியாமல்.......
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
31-அக்-202105:18:03 IST Report Abuse
Amal Anandanபொய்யை விதைத்தது வினோத் ராய். அவர் பிஜேபி ஆள்....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-அக்-202112:19:56 IST Report Abuse
Anand சாவர்கரை பற்றி தவறாக கூறும் கழிசடைகள் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை...
Rate this:
Suri - Chennai,இந்தியா
29-அக்-202113:48:49 IST Report Abuse
Suriபரிதாபமா இருக்கு...வாட்ஸாப் பல்கலைக்கழக அறிவு...இப்படி தான் பேச வைக்கும்...ஆனா... படு பரிதாபமா இருக்கு.. மன்னிப்பு கடிதம் கொடுக்கவே இல்லை என்று இது வரை அக்மார்க் சாங்கி கூட சொல்ல முடியல .. காந்தி சொன்னார் மன்னிப்பு கடிதம் கொடுத்தார் என்று அடித்து விடுவது மட்டுமே அவர்களால் முடிந்தது......
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-அக்-202118:42:35 IST Report Abuse
Kasimani Baskaran"படு பரிதாபமா இருக்கு" - அடிமைகளுக்கு எப்படி சாவர்க்கரைப்பற்றித்தெரியும்?...
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
29-அக்-202110:34:34 IST Report Abuse
ஆனந்த் பொய் புரட்டு பித்தலாட்டம் இவற்றின் மொத்த உருவம் பப்பு .. பல வழக்குகளில் நீதிமன்றம் ஏறி சிலவற்றுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளான்
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
31-அக்-202105:18:45 IST Report Abuse
Amal Anandanஅவங்களும் அயோக்கியர்கள் நாங்களும் அப்படியே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X