ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 8 அரசு அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்து யூனியன் பிரதேச அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 8 உயரதிகாரிகள் மீது ஊழல்புகார்கள் கூறப்பட்டன.இது தொடர்பாக விரிவான விசரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம்,ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் அத்தியாவசிய பணிகள் ஒழுங்குமுறை சட்டம், பிரிவு 226 (2) ன் கீழ், எட்டு ஊழல் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனடியாக 'டிஸ்மிஸ்' செய்து ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் உத்தரவிட்டது.
11 ஊழியர்கள் 'டிஸ்மிஸ்'
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சிலர் செயல்படுவதாக, யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 11 ஊழியர்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவது உறுதியானது. இதையடுத்து அவர்களை யூனியன் பிரதேச நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE