ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களுக்கு விரைவில் பெயர் மாற்றம்; மண்டலவாரி கணக்கெடுப்பு துவக்கம்

Updated : அக் 29, 2021 | Added : அக் 29, 2021 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை: ஜாதி பெயரில் இருந்த குளங்களுக்கு, பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, சென்னையில் ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களுக்கும், விரைவில் பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்காக, மண்டல வாரியாக ஜாதி பெயரில் உள்ள தெருக்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.சென்னையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,

சென்னை: ஜாதி பெயரில் இருந்த குளங்களுக்கு, பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, சென்னையில் ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களுக்கும், விரைவில் பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.latest tamil news


இதற்காக, மண்டல வாரியாக ஜாதி பெயரில் உள்ள தெருக்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.சென்னையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். மேலும், பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, சீரமைக்கப்பட்டுள்ள குளங்கள் குறித்த பட்டியலை, முதல்வரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.அதில், 'வண்ணான் குளம்' என்ற பெயருடன் இரண்டு குளங்கள் இருந்தது. இவை, ஒருமையில் குறிப்பிடும் வகையிலும், குறிப்பிட்ட ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும் இருந்ததால், அந்த பெயரை மாற்றக்கோரி, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடிக்கு முதல்வர் உத்தரவிட்டார்.


உத்தரவு

அதன் அடிப்படையில், அம்பத்துார் மண்டலம், 82வது வார்டு, சோழிங்கநல்லுார் மண்டலம், 192வது வார்டுகளில் இருந்த, 'வண்ணான் குளம்' என்ற பெயர் திருத்தம் செய்யப்பட்டு, 'வண்ண குளம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதல்வரின் உத்தரவில் மாநகராட்சியால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தெருக்களில், குறிப்பிட்ட ஜாதிகளை குறிப்பிடும் வகையில் உள்ள பெயர்களை மாற்றி சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பெயர் மாற்றம் செய்ய, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் மாநகராட்சி களம் இறங்கி உள்ளது.


சமத்துவம்

இதற்காக, நவம்பரில் நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றவும், பெயர் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களுடன், 200 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. சுமார், 426 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட மாநகராட்சியில், 33 ஆயிரத்து, 834 தெருக்கள் உள்ளன. தமிழக மக்கள் சமத்துவத்தை விரும்புபவர்கள் என்பதால், அவ்வப்போது ஜாதி பெயர்களுடன் இருந்த தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.குறிப்பிட்ட தலைவரின் பெயருக்கு பின்னால் இருந்த ஜாதி பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு, அத்தலைவரின் பெயர்களில் மட்டுமே தெரு பெயர் உள்ளது.


latest tamil newsதற்போதைய சூழலில், பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதி அடையாளங்கள் அகற்றப்பட்டுள்ளன. எனினும், குறிப்பிட்ட சில பகுதிகளில், ஜாதி பெயர்களுடன் தெருக்கள் உள்ளன.அடையாளம்முதல்வர் ஸ்டாலின், அனைத்து பகுதிகளிலும் ஜாதி பெயர்களை அடையாளப்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார். எனவே, ஒவ்வொரு மண்டலத்திலும், குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடும் வகையில் உள்ள தெருக்கள் அடையாளம் காணப்பட உள்ளது.

நவம்பர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, இது குறித்து அதிகாரிகளின் கருத்துகள் பெறப்படும். அதன் பின், மண்டல வாரியாக தெருக்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டு, ஜாதியை குறிக்காத வகையில், பெயரில் சிறு, சிறு மாற்றம் செய்யப்படும். இதற்கு, அப்பகுதி மக்களிடமும் கருத்துகள் பெறப்படும். பொதுமக்களின் கருத்துகளின்படியே, தெருக்களின் ஜாதி பெயர்களில் மாற்றம் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
03-நவ-202119:59:24 IST Report Abuse
sankar காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லாமே சாதி பெயர்தான் - என்ன செய்யலாம் சார்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-நவ-202105:30:09 IST Report Abuse
meenakshisundaram முதல்லே ஸ்கூல் பிள்ளைகளின் மார்க் சாண்றிதழ்களிலும் ரெகார்ட களிலும் ஜாதி பேரை எடுங்கடா பிறகு ஜாதி சான்றிதழ்களை கிழிச்சு போடுங்கடா அப்புறம் ஜாதி யை ஒழிங்க ஜாதி சங்கங்களை ஒழிங்க .கடோசிலே ஜாதி காட்சிகளை ஒழிங்க -அத வுட்டுட்டு ???
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-அக்-202112:40:57 IST Report Abuse
raja ஒருமுறை கும்பகோணம் போனபொழுது.. தெருகளின் பெயர்களை வாசிக்க நேர்ந்தது... இதோ...சௌராஷ்டிர நாடு தெரு, சௌராஷ்டிர பெரியத்தெரு, சௌராஷ்டிர புது தெரு..யாதவர்(இட)தெரு, தாண்டான் தெரு, ஐயங்கார் தெரு, வண்ணான் தெரு ... பச்சையப்ப முதலி தெரு.... இன்னும் பல தெரு பெயர்கள் எல்லாம் ஜாதியின் அடையாளமே.. அங்கு அந்த இனத்தவர்கள் தான் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்...,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X