சென்னை : 'எது சுலபமோ அதையே மக்கள் செய்கின்றனர்' என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆதங்கப்பட்டார்.
சேலம் ஆத்துார் ஆணைவாரி அருவியில் இருந்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய அப்துல் ரஹ்மானை அலைபேசியில் தொடர்பு கொண்டு கமல் பாராட்டு தெரிவித்தார். அப்போது கமல் கூறியதாவது: நீங்கள் வனத்துறை சம்பந்தப்பட்டவராக இல்லாமல் போனது ரொம்ப சந்தோஷம். ஏன் என்றால் அனைவருக்கும் கடமை உள்ளது. அதை புரிந்து செய்துள்ளீர்.
ஆபத்து என தெரிந்தும் களமிறங்கினீர். இந்த முயற்சி தான் அரசியலுக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் வேண்டும். உங்களை பாராட்டுவதே அதற்காக தான். என் கட்சியில் இணைய சொல்லவில்லை. இந்த துணிச்சலை மட்டும் கைவிடாதீர். அந்த கூட்டத்தில் 'வேண்டாம் போகாதே' என்று சொல்பவர் தான் அதிகம் இருந்தனர். எது சுலபமோ அதை தான் மக்கள் செய்கின்றனர்.
அந்த வீடியோவை பார்த்து எனக்கு ரொம்ப கோபமாகவே இருந்தது.விபத்தில் ஒருவர் பாதித்த நிலையில் இருக்க சிலர் 'செல்பி' எடுக்கின்றனர். நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
'டுவிட்டர்' பதிவில் கமல் கூறியிருப்பதாவது: 'பெகாசஸ்' உளவு மென்பொருள் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE