கஷீப் கான்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?- ஆர்யன் கான் விவகாரத்தில் அமைச்சர் கேள்வி

Updated : அக் 29, 2021 | Added : அக் 29, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
மும்பை: மது விருந்துக்கு ஏற்பாடு செய்த கஷீப் கான்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த அக்டோபர் 2ம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற ஆடம்பர கப்பலில் பயணித்தார். அங்கு நடந்த மது விருந்தில் நள்ளிரவில் திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியபோது
கஷீப்கான், நடவடிக்கை, ஆர்யன்கான், அமைச்சர், கேள்வி,

மும்பை: மது விருந்துக்கு ஏற்பாடு செய்த கஷீப் கான்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் 2ம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பையில் இருந்து கோவா நோக்கி சென்ற ஆடம்பர கப்பலில் பயணித்தார். அங்கு நடந்த மது விருந்தில் நள்ளிரவில் திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியபோது ஆர்யன் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எட்டு பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர். தற்போது தொடர் போராட்டத்திற்குப் பிறகு மும்பை நீதிமன்றம் ஆர்யனுக்கு ஜாமின் வழங்கியுள்ளது.

இந்நிலையில் மூத்த தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மற்றும் மஹா., மாநில அமைச்சர் நவாப் மாலிக் இதுகுறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மும்பையில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாலிக், கஷீப் கான் என்கிற பேஷன் டிவி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் குறித்து பேசினார். கடந்த அக்டோபர் 2ம் தேதி சொகுசுக் கப்பலில் நடந்த மது விருந்தை ஏற்பாடு செய்தவர் கஷீப் கான். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கஷீப் கான் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


latest tamil news



ஆர்யன் கானின் நண்பர் மூலமாக கையூட்டு பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் அதிகாரி சமீர் வான்கடே விளக்கம் அளிக்க கோரி மூன்று நாள் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை அடுத்து வாங்கடே கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் ஆர்யனுக்கு உதவியதாகக் கூறப்படும் தனியார் புலனாய்வாளர் கோசாவி தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கும்போது கஷீப் கான்மீது மட்டும் ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். இது வைரல் ஆகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-அக்-202106:35:10 IST Report Abuse
அக்கப்போர் இவ்வளவு கூப்பாடும் எதற்கு மாலிக்கு? உங்க மருமகப்பிள்ளை போதை பொருள் மொத்த வியாபாரி என்பது மூடி மறைப்பதற்கு தானே? அது என்னது கான், மாலிக், அர்பாஸ், காஷிப் கான். எல்லாம் ஒரே மாதிரி டிசைனா தெரிதே? எங்கேயோ இடிக்குதே?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-அக்-202123:23:26 IST Report Abuse
Natarajan Ramanathan கான் என்ற பெயர் உடைய அனைவரையும் கைது செய்து விசாரணை செய்தால் உண்மை வெளியில் வந்துவிடும்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
29-அக்-202122:23:27 IST Report Abuse
a natanasabapathy கருத்து க்களை யோசித்து போடுங்கப்பா கண்டு வச்சுட போகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X