புதுடில்லி: பாகிஸ்தானில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழை, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவிடம் இருந்து பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாட்டு பல்கலைகளில் படித்து பெறும் பட்டங்கள் சில நேரங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதனால், அந்த மாணவர்கள் இந்தியாவில் பணியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் நலனை கருத்தில் வைத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு, அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியர்களில் சிலர், பாகிஸ்தானில் உள்ள பல்கலைகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர, அதிக அளவில் ஆர்வம் செலுத்துகின்றனர். அப்படி அங்கு உயர் கல்வியை படிக்க விரும்பும் மாணவர்கள், இனி ஆட்சேபனை இல்லை என்பதற்கான சான்றிதழை, ஏ.ஐ.சி.டி.இ., நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டியது அவசியம். அதற்காக, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE