சென்னை: தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு காரணமாக, ஆவின் இனிப்புகளை வாங்க, 'ஆர்டர்'கள் குவிந்து வருகின்றன.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஐந்து வகை சிறப்பு இனிப்புகள் விற்பனையை, ஆவின் நிறுவனம் துவக்கிஉள்ளது.
57 கோடி ரூபாய்
இவற்றுடன் ஆவின் நிறுவனத்தின் பிரத்யேக பால்கோவா, மைசூர்பா உள்ளிட்ட இனிப்புகள் விற்பனையும் நடக்கிறது. ஆவின் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கும் வகையில், அந்நிறுவனம் தயாரிக்கும் இனிப்புகளை வாங்க வேண்டும் என, அனைத்து துறைசெயலர்களுக்கும், தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, ஆவின் இனிப்புகளை வாங்குவதற்கு 'ஆர்டர்'கள் குவிந்து வருகின்றன.
போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி, மத்திய கூட்டுறவு வங்கி, தமிழக சிமென்ட் நிறுவனம், தலைமை செயலக அலுவலக பணியாளர் சங்கம், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.மேலும், உணவுப்பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் ஆவின் இனிப்புகளை வாங்க, ஆர்வம் காட்டிவருகின்றன.

கடந்தாண்டு தீபாவளி நேரத்தில், ஆவின் இனிப்புகள், நெய் உள்ளிட்டவை 57 கோடி ரூபாய்க்கு விற்பனையாயின.
65 கோடி ரூபாய்
தற்போது, சென்னையில் 30 கோடி ரூபாய்க்கும், மற்ற மாவட்டங்களில் 28 கோடி ரூபாய்க்கும் ஆவின் இனிப்புகள், நெய் உள்ளிட்டவை விற்பனையாகி உள்ளன.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், இப்பொருட்கள் விற்பனை 65 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE