இது உங்கள் இடம்: சசிகலா செய்த தியாகம் என்ன?

Updated : அக் 30, 2021 | Added : அக் 30, 2021 | கருத்துகள் (81)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பது தான், இப்போது அக்கட்சியினர் முன் உள்ள பிரச்னை. அ.தி.மு.க., தோன்றிய போது, கட்சியில் உறுப்பினராக சசிகலா இல்லை. எம்.ஜி.ஆர்., இருந்தபோது, கட்சியில் உறுப்பினராக சேர்ந்தஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்சி.சிவகுமார், கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பது தான், இப்போது அக்கட்சியினர் முன் உள்ள பிரச்னை. அ.தி.மு.க., தோன்றிய போது, கட்சியில் உறுப்பினராக சசிகலா இல்லை. எம்.ஜி.ஆர்., இருந்தபோது, கட்சியில் உறுப்பினராக சேர்ந்த ஜெயலலிதா, கொள்கைப் பரப்புச் செயலர், ராஜ்யசபா உறுப்பினர் என படிப்படியாக முன்னேறினார்.latest tamil news
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், சில போராட்டங்களை சந்தித்து, வெற்றிகண்டு, கட்சியின் பொதுச்செயலரானார்; பின், முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சசிகலா நேரடியாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் அமர்ந்து, கட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார். ஜெயலலிதாவின் உண்மையான தோழியாக இருந்தால், 'எனக்குப் பின்னாலும் அ.தி.மு.க., 100 ஆண்டுகள் இருக்கும்' என்ற அவரது கனவை நனவாக்க, சசிகலா பாடுபட வேண்டும்.

'நான், கட்சியில் உறுப்பினராகவே இருக்கிறேன். என் குடும்ப உறுப்பினர் யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம். கட்சியில் எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம். தேர்தலில் போட்டியிட மாட்டேன். வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபட்டு கட்சியைக் காப்போம்' என சசிகலா அறிவித்தால், கட்சியினரிடையே நம்பிக்கை ஏற்படும். அதை விடுத்து, கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல், எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத சசிகலா, தான் பொதுச் செயலாராகவே இருப்பேன் என்றால், அதை பெரும்பாலான தொண்டர்கள் எப்படி ஏற்பர்?


latest tamil news

ஜெயலலிதாவைப் பயன்படுத்தி கட்சியிலும், ஆட்சியிலும் அதிகார மையமாக திகழ்ந்து, தன்னையும், தன் குடும்பத்தையும் வளப்படுத்தியவர் சசிகலா. அவருக்கு கட்சி பொதுச்செயலர் பதவி கொடுத்து, மன்னார்குடி குடும்பத்துக்கு அடிமை வாழ்வு வாழ, உண்மையான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் விரும்ப மாட்டார்கள். அ.தி.மு.க., கட்சி அதிகாரத்தில் சசிகலா அமர்ந்தால், 'ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதாம்' என்ற கதையாகி விடும்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami V - Petaling Jaya,மலேஷியா
31-அக்-202102:31:46 IST Report Abuse
Ramaswami V நல்ல கருத்து தான். அதேசமயம் மற்ற கட்சிகள் எப்படி என்று பார்க்கவேண்டும் ? சசிகலாவை ஏற்காதவர்கள் தொடர்ந்து அந்த கட்சியிலேயே இருந்து கட்சியை முன்னேற்றினால் சரி. அவர்கள் மற்ற கட்சிகளுக்கு, ஊழலுக்கு, பரம்பரை அரசியலுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கட்சியில் நம்பிக்கையை இழக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்து இருந்தால் நன்றாக இருக்கும். இதே கட்சியில் உள்ள மற்றவர்கள் செய்த தியாகம் என்ன ? மற்ற கட்சி தலைவர்கள் வளரும் அல்லது வளர்க்கப்படும் தலைவர்கள் செய்த தியாகங்கள் என்ன என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
30-அக்-202122:04:58 IST Report Abuse
Priyan Vadanad இன்னும் எத்தனை நாளுக்கு இந்த செய்தியை ஓட்டுவதாதாக உத்தேசம்?
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
30-அக்-202121:37:16 IST Report Abuse
s t rajan Deserve and desire என்ற முதுமொழி அரசியலுக்கு பொறுந்தாது போலிருக்கிறது. தவறான முறையில் சொத்து சேர்த்து குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் சிறை வாசம் அனுபவித்த ஒருவர் எப்படி தலை நிமிர்ந்து வெளியில் நடமாடுகிறார், என்பதை நினைத்தால் கேவலமாக இருக்கிறது. மேலும் எம் ஜீ ஆரும் ஜெயலலிதாவும் உயிரைக் கொடுத்து வளர்த்த கட்சிக்கு இந்த குற்றவாளி எவ்வாறு உரிமை கொண்டாடுகிறார் என்பதும் புரியவில்லை. மேலும் "தங்கத் தலைவி தியாகத்தலைவி" என்ற அடைமொழிகளுடன் இவரது போஸ்டர்கள் அந்த வார்த்தைகளை கொச்சைப் படுத்துவது போலிருக்கிறது. இவர் என்ன தேசத்திற்காக த்யாகம் செய்தா சிறை சென்றார் ? தான் அவமானப்பட்டது போதாதென்று அந்தக் கட்சியினுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இவரை, உண்மையான அரசியல்வாதிகள் எவரும்(எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும்) மதிக்க மாட்டார்கள். இவர் சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டிய ஒருவர் என்பதில் ஐயமில்லை. எஞ்சிய காலத்தில் அமைதியாக வாழ்ந்து வருவதே இவருக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X