பொது செய்தி

தமிழ்நாடு

தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Updated : அக் 30, 2021 | Added : அக் 30, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த அக்,.28ம் தேதி துவங்கி இன்று 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது.நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா
ராமநாதபுரம், தேவர் நினைவிடம், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மரியாதை,

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா கடந்த அக்,.28ம் தேதி துவங்கி இன்று 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. இரண்டாவது நாளாக அரசியல் விழா நடைபெற்றது. பசும்பொன்னில் இன்று (அக்., 30ம் தேதி) நடைபெற்ற அரசு விழாவில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


latest tamil news


முன்னதாக, முதல்வர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

முதல்வர் வருகையை ஒட்டி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
30-அக்-202121:46:38 IST Report Abuse
s t rajan தேசபக்தி தெய்வ பக்தி இரண்டும் தன் கண்கள் என்றவர் தேவர் அவர்கள். தெய்வத்தை, அதிலும் குறிப்பாக இந்துக்களின் வழிபாட்டு முறைகளை இகழும் திமுக தலைவர் எவ்வாறு தேவர் பூஜைக்கு செல்கிறார். ஓட்டு பிச்சைக்காகவா ?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-அக்-202119:17:55 IST Report Abuse
வெகுளி தேவர் ஐயா அமைதியாக அமர்ந்திருக்கிறார் என்ற துணிச்சலில் அருகில் போய்ட்டாங்க....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-அக்-202119:08:26 IST Report Abuse
வெகுளி விபூதி பூசிக்க ஒரு முகவெட்டு வேணும்.... எல்லோருக்கும் அந்த கொடுப்பினை அமையாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X