வாடிகன் சிட்டி: ‛ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.

இத்தாலி தலைநகர் ரோமில் ‛ஜி20' அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றடைந்தார்.

முதல் நிகழ்ச்சியாக, ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்தார். பின்னர், ரோம் நகரில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
Prime Minister Narendra Modi arrives at the Vatican City to meet Pope Francis pic.twitter.com/rWCNxl7mVI
— ANI (@ANI) October 30, 2021
இதை தொடர்ந்து, வாடிகன் நகருக்கு மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் போப் பிரான்சிசை மோடி சந்தித்து பேசினார்.
#WATCH Prime Minister Narendra Modi at the Vatican City to meet Pope Francis
He is accompanied by NSA Ajit Doval and EAM Dr S Jaishankar pic.twitter.com/JZiMbXUtLN
— ANI (@ANI) October 30, 2021
பிரதமருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது, கோவிட், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொது விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
Prime Minister Narendra Modi departs from the Vatican after his meeting with Pope Francis pic.twitter.com/KXdOyKvPSA
— ANI (@ANI) October 30, 2021
இந்தியா வர அழைப்பு

போப் பிரான்சிசை சந்தித்த பிறகு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பு வெகுசிறப்பாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India. @Pontifex pic.twitter.com/QP0If1uJAC
— Narendra Modi (@narendramodi) October 30, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE