ஈரான் ராணுவம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பு

Updated : அக் 30, 2021 | Added : அக் 30, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்கக் கருவூலத்துறை ஈரான் ராணுவம் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளது.இதுகுறித்து அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது கடந்த 2019ம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் ராணுவம் நடத்தியது. 2021ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி ஓமன் கடற்கரையில்
ஈரான், ராணுவம், அமெரிக்கா, பொருளாதார தடை, அதிர்ச்சி,

வாஷிங்டன்: அமெரிக்கக் கருவூலத்துறை ஈரான் ராணுவம் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளது.

இதுகுறித்து அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது கடந்த 2019ம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் ராணுவம் நடத்தியது. 2021ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி ஓமன் கடற்கரையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனத்தால் இயக்கப்படும் மெர்சர் ஸ்ட்ரீட் வணிகக் கப்பலின் மீதும்ஈரான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.


latest tamil news


ஈரானின் ட்ரோன்கள், ஹமாஸ், ஹவுத்தி போன்ற கிளர்ச்சியாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, ஈரான் ராணுவ ட்ரோன் பிரிவின் மீதும், ஈரான் ராணுவத்தின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைவர் அகாஜானி மீதும் புதிதாகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெஹ்ரானுக்குத் தெற்கே போர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-அக்-202119:26:41 IST Report Abuse
சம்பத் குமார் 1). இன்றைய சூழ்நிலையில் Economic போட்டி எலா நாடுகளுக்கு இடையில் நடைபெறுகிறது.2). இதை மனதில் வைத்து உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.3). இந்தியா சீனா போன்ற நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்தை மீறி ஏற்றுமதி செய்கின்றனர்.4). மற்ற நாடுகளுக்கு திட்டமிடல் இருந்தால் ஏற்றுமதி என்பது ஏதுவாகிறது.ஏன் எனில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் இவை.5).. பொருளாதார வளத்தை பெருக்க வேண்டும்.6). இல்லையெனில் பாகிஸ்தான் நிலைமைக்குதான் செல்ல வேண்டி இருக்கும்.7). முஸ்லிம் நாடுகளில் இந்தோனேசியா வளர்ச்சி பாராட்டுக்குரியது. 8). கடற்படையை பொறுத்த வரையில் உலகில் உள்ள அத்தனை நாடுகளின் கடற்படையை ஒருகிணைத்தால் கூட அமெரிக்கா கடற்படை அதைவிட இருமடங்கு வலிமையானது.9). எதற்கு அவர்களிடம் வம்பு. அவர்களிடம் குறைந்தது நண்பராக இருக்க வேண்டும் அல்லது எதிரியாக கூடாது.10). சிறு சிறு ஊசி பட்டாசுகளை அவர்களிடம் எறிந்து விளையாட்டு காட்டினால் நஷ்டம் மற்றும் பொருளாதார இழப்பு நமக்குதான். நன்றி ஐயா.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
30-அக்-202118:11:42 IST Report Abuse
Vittalanand இந்த அமெரிக்காவுக்கு ஈரான் எண்ணெய் மீது கசதல். எப்படியாவது அதை திருட வேண்டும் என்னும் நப்பாசை. எந்த தடையானாலும் வெற்றிகரமாக சந்திக்கிறது. இயஹில் சண்ணி ஷியா விரோதத்தை வளர்த்து குளிர் காய நினைக்கூறது. இதனால் இந்தியாவுக்கு ஈரானின் உயர் ரக மல்கோவானஎண்ணை கிடைப்பயது நின்றுவிட்டது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
30-அக்-202117:10:47 IST Report Abuse
Vena Suna ஈராக்கை அழித்தது போதாது என்று ஈரான் மீது கண் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X