குலக் கல்வியும், தொழிற் கல்வியும்!

Updated : நவ 01, 2021 | Added : அக் 30, 2021 | கருத்துகள் (26)
Advertisement
இன்றைக்கு, 'டாஸ்மாக்' என்ற பெயரில், அரசு நடத்தும் சாராயக் கடைகள் எப்படி அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருக்கிறதோ, அதுபோல, 1939ல், அப்போதைய முதல் மந்திரி சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் விற்பனை வரி.எப்படி டாஸ்மாக், அரசுக்கும், அதில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் கடைச் சிப்பந்திகள் வரை அனைவருக்கும் வருமான ஊற்றாக உள்ளதோ, அது போல,
குலக் கல்வியும், தொழிற் கல்வியும்!

இன்றைக்கு, 'டாஸ்மாக்' என்ற பெயரில், அரசு நடத்தும் சாராயக் கடைகள் எப்படி அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருக்கிறதோ, அதுபோல, 1939ல், அப்போதைய முதல் மந்திரி சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் விற்பனை வரி.எப்படி டாஸ்மாக், அரசுக்கும், அதில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் கடைச் சிப்பந்திகள் வரை அனைவருக்கும் வருமான ஊற்றாக உள்ளதோ, அது போல, இந்த விற்பனை வரித் துறையும் இருக்கிறது.
வேண்டுகோள்

அந்த துறையில் பணியாற்றும் கடை நிலை ஊழியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள், வியாபாரிகள் முதல், அந்த துறை அமைச்சர் வரை வருமான ஊற்றாகவே இருந்து கொண்டிருக்கிறது.ராவணனின் தம்பிகளுள் ஒருவன் கும்பகர்ணன். அவன் பிரம்மாவிடம், அழியாத வாழ்வு வேண்டும் என்ற கோணத்தில், 'நித்தியத்துவம்' வரம் வேண்டி தவம் இருந்தான்.

அந்த வரம் மட்டும் அவனுக்கு கிடைத்து விட்டால், தேவலோகத்தில் இருக்கும் தேவர்களின் நிம்மதி பறி போய் விடும். அதனால் தேவேந்திரன், பிரம்மனின் மனைவி சரஸ்வதி தேவியிடம், 'கும்பகர்ணன், பிரம்மாவிடம் வரம் கேட்கும் போது, அவனது நா குழறும் படி செய்ய வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தான்.சரஸ்வதி தேவியும், தேவேந்திரனின் வேண்டு கோளை ஏற்று, கும்பகர்ணன், பிரம்மாவிடம் வரம் கேட்கும் போது, 'நித்தியத்துவம்' என்று கேட்பதற்கு பதிலாக நாவை குழற வைத்து, 'நித்திரத்துவம்' என்று வரம் கேட்குமாறு செய்து விட்டாள்.

கும்பகர்ணனின், அழியாத வாழ்வு வேண்டுமென்ற கோரிக்கை நிராசையாகி, துாக்கத்தை தழுவியதோ அது போல, மூதறிஞர் ராஜாஜியின் வார்த்தையில் ஏற்பட்ட ஒரு பிழையானது, அவரது முதல் மந்திரி பதவியை பறித்ததோடு, நாளது தேதி வரை, அவரது புகழுக்கு ஓர் அழியாத களங்கத்தையும் உருவாக்கிக் கொடுத்து விட்டது.கடந்த 1967 வரை தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சி காங்கிரஸ். அரசின் செலவினங்கள், அரசின் வருவாய்க்கு மிகாதவாறு கவனத்துடன் நிர்வாகம் புரிந்தது.

எங்கும், எதற்கும், ஒரு போதும் கடன் வாங்கியதுமில்லை; வாங்க முயற்சித்ததும் இல்லை. ஆனால் அதற்கு பிறகு ஆட்சியில் அமர்ந்தவர்கள், கடன் வாங்குவதையே ஒரு கலையாக மாற்றி, 'கல்லா கட்ட' துவங்கினர். கக்கூஸ் கட்டுவதிலிருந்து, அமைச்சர்களுக்கு சொகுசு கார்கள் வாங்குவது வரை, எல்லாவற்றிற்கும் உலக வங்கி போன்ற அமைப்புகளில் கடன் வாங்க துவங்கினர்.

இன்றைய தேதியில் தமிழக அரசின் கடன், 6 லட்சம் கோடி ரூபாய். இத்துடன் முடியவில்லை; இன்னும் தொடர்கிறது.கடந்த 1953 ஏப்ரலில், ராஜாஜி, சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக இருந்த போது, ஒரு சீர்திருத்த முயற்சியை மேற்கொண்டார்.


அறிமுகம்

அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியர், பட்டியல் ஜாதியை சேர்ந்த மாணவர்களும், தினமும் மூன்று மணி நேரம் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நேரம், பெற்றோருக்கு ஒத்தாசையாக கழிக்கலாம் என்று ஒரு சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது, தச்சர் மகனுக்கு தச்சு தொழில் நுட்பமும், தட்டார் மகனுக்கு நகை செய்யும் நுணுக்கமும், சிற்பக் கலைஞர் மகனுக்கு சிற்ப வேலைப்பாட்டு நேர்த்தியும், சமையல் கலைஞர் மகனுக்கு நளபாகமும் பிறவியிலேயே வாய்த்திருக்கும்.
அந்த பண்பு, அவரவர் 'ஜீன்' எனப்படும் உடல் மூலக்கூறிலேயே உறைந்திருக்கும். அந்த பண்புகள், தகப்பனார் கூடவே இருந்து மெருகேற்றினால் மேலும் மிளிரும்.அந்த கோணத்தில், அந்த உயர்ந்த நோக்கத்தில் தான், சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப் படுத்திய அவர் செய்த மாபெரும் தவறு என்னவென்றால், இந்த திட்டத்திற்கு, 'குலக் கல்வி திட்டம்' என்று பெயர் சூட்டியது தான்.அந்த திட்டத்திற்கு அப்போது, 'தொழிற் கல்வி திட்டம்' என்று பெயர் சூட்டப் பட்டிருந்தால், எந்த மூலையில் இருந்தும், எந்த அரசியல்வாதியிடமிருந்தும், எந்த அரசியல் கட்சியிடமிருந்தும் சிறிய அளவில் கூட எதிர்ப்பு வந்திருக்காது.

ஆனால், இப்போது நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது... கொஞ்சம் கூர்ந்து பாருங்கள்.அரசியலில், ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு அவரது மகள் இந்திரா; இந்திராவுக்கு பிறகு அவரது மகன் ராஜிவ்; ராஜிவிற்கு பிறகு அவரது மனைவி சோனியா... லாலு பிரசாத் யாதவுக்கு பிறகு ரப்ரி தேவி; ரப்ரி தேவிக்கு பிறகு லாலுவின் மகன் தேஜஸ்வி. முலாயம் சிங் யாதவுக்கு பிறகு அகிலேஷ் யாதவ். ஆந்திர முன்னாள் முதல்வர், நடிகர் என்.டி.ஆரின் மறைவுக்கு பிறகு, அவரது மனைவி சிவபார்வதி, மருமகன் சந்திரபாபு நாயுடு.

காங்., முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்கு பின் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி. சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே. பால் தாக்கரேக்கு பின் அவர் மகன் உத்தவ் தாக்கரே.இங்கு தமிழகத்தில் கருணாநிதிக்கு பின் அவர் மகன் ஸ்டாலின்; ஸ்டாலின் மகன் உதயநிதி; கருணாநிதி மகள் கனிமொழி; வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன், சமீபத்தில் இறந்த ராஜா.அன்பில் தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பொய்யா மொழி. பொன்முடியின் மகன் கவுதம். ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை. வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் என, வாழையடி வாழையாக தொடர்கின்றனர்.இப்போது 'லேட்டஸ்ட்' வாரிசு அரசியலுக்கு உதாரணமாக திகழ்கிறார், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ.

வாரிசு அரசியலை, 40 ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்த்து கொண்டிருந்த அவர் மகன் துரை வையாபுரி, ம.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.அரசியல் போலவே, வெகு பிரபலமாக திகழும் சினிமா துறையிலும் வாரிசுகள் கோலோச்சுகின்றனர்.


குற்றச்சாட்டு

நடிகர்களில் சிவாஜியின் மகன் பிரபு; பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. முத்துராமனின் மகன் கார்த்திக்; கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். சிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி. மறைந்த முரளியின் மகன் அதர்வா.பாக்யராஜின் மகன் சாந்தனு. சத்யராஜின் மகன் சிபி. மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன். இசையமைப்பாளர் இளைய ராஜாவின் மகன்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா. கங்கை அமரனின் மகன்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு.செந்திலின் மகன் ஹேமசந்திர பிரபு, நடிகையரில் ஜெமினி கணேசனின் மகள் ரேகா, ராதாவின் மகள் கிருத்திகா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இன்னும் ஏராளம் ஏராளம்.

இவர்கள் அனைவரும் அவரவர் தந்தை அல்லது தாய் செய்த தொழிலைத் தானே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்...இன்னும் நாட்டில் டாக்டர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டர்களாகத் தான் ஆக்குகின்றனர். வக்கீல்கள் தங்கள் பிள்ளைகளை வக்கீல்களாகவும், இன்ஜினியர்கள் தங்கள் வாரிசுகளை இன்சினியர்களாகவும் தானே உருவாக்க போராடி கொண்டிருக்கின்றனர்.

சென்னை மாகாண முதல் மந்திரியாக இருந்த ராஜாஜி, 'தொழிற் கல்வி திட்டம்' என்ற திட்டத்தை நாக்கு குழறி, 'குலக் கல்வி திட்டம்' என்று சொன்ன போது, அதையே உடும்பு பிடியாக பிடித்து, எதிர்த்த அத்தனை பேரும், தங்கள் வாரிசுகளை, தங்கள் தொழில்களில் தானே ஈடுபட வைக்கின்றனர்...ராஜாஜியின் அறிவிப்பு வெளியான நாள் முதல், மாநிலமெங்கும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டத்தை எதிர்த்தன.

திராவிட இயக்கத்தினர், 'இத்திட்டம் கல்வியிலும், அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டம்' எனக் குற்றஞ்சாட்டினர்.தி.க., - தி.மு.க., கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியிலேயே சிலரது கடும் எதிர்ப்பால் ராஜாஜி கொண்டு வந்த அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அந்த திட்டம் பற்றி ஆராய, பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆகஸ்ட் 1953ல், இத்திட்டம் முறையானது தான் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் அதற்குள், பொதுமக்களில் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பி இருந்தனர். ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால், ராஜாஜி அந்த திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்கி விட கட்சிக்காரர்கள் தயாராகினர்.


ஏட்டுச் சுரைக்காய்

இதை அறிந்த ராஜாஜி, மார்ச் 1954ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர், குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பாளர். கடந்த 1954 மே 18ல் கல்வி அமைச்சர் சி.சுப்ரமணியம், பொதுமக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டசபையில் அறிவித்தார்.

ஆனால், குலக் கல்வி திட்டத்தை எதிர்த்த தி.க., - தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர், தங்கள் வாரிசுகளை தங்கள் தொழிலான அரசியலிலேயே வைத்துள்ளனர்.இதில் விசேஷம் என்னவென்றால், ராஜாஜி அறிமுகப்படுத்திய போது, ஆவேசம் கொண்டு ஆடி, ஆர்ப்பாட்டம் செய்து, போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் கி.வீரமணி தன் மகன் அன்புராஜை, திராவிடர் கழகத்தின் தலைமை நிலைய செயலராக பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
அதாவது, வீரமணிக்கு அடுத்தது வீர.அன்புராஜ் தான். இது தான் தமிழக அரசியல். இனிமேலாவது அரசியல்வாதிகளின் மேடை பேச்சுக்களையும், ஆர்ப்பாட்ட அரசியலையும், 'புருடா' வாக்குறுதிகளையும், பொய் முகங்களையும் பார்த்து, ரசித்து, சிரித்து, ஏமாந்து கொண்டிருக்காதீர்கள் மக்களே.உபயோகமாக சிந்தித்து, உருப்படும் வழியை பாருங்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது; அரசியல்வாதிகளின் பேச்சு வாழ்க்கைக்கு உதவாது!

எஸ்.ராமசுப்ரமணியன்
எழுத்தாளர்
தொடர்புக்கு:இ-மெயில்: essorres@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
12-நவ-202116:10:50 IST Report Abuse
தஞ்சை மன்னர் முழு பூசணிக்காவை சோற்றில் மறைக்க முயற்சி
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
01-நவ-202117:01:21 IST Report Abuse
DVRR டாக்டர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டர்களாக, வக்கீல்கள் தங்கள் பிள்ளைகளை வக்கீல்களாக, இன்ஜினியர்கள் தங்கள் வாரிசுகளை இன்சினியர்களாக இவை எல்லாம் எப்படி?? நல்ல கல்லூரியில் படித்து வெளியே வந்த பின்????நடிகர் /நடிகை , அரசியல்வாதிகள், பிள்ளைகள் என்ன படிப்பு அல்ல என்ன அறிவினால் நடிகர் / நடிகை , அரசியல்வாதி ...ஆகின்றனர் இது வெறும் வாரிசு வழியாகவே இருக்கின்றன???இது தான் இந்த இரண்டுக்கும் வித்தியாசம்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-நவ-202109:10:22 IST Report Abuse
பாமரன் இதுக கிட்ட இதுக்கு மேல எதிர் பார்க்க முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X