வாடிகன் சிட்டி:கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தார்.
'ஜி - 20' மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு சென்றுள்ளார். வாடிகனில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை நேற்று அவர் சந்தித்து பேசினார்.அப்போது, போப் பிரான்சிஸை கட்டித் தழுவி வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மோடி வெளியிட்டு உள்ளார்.
'பல்வேறு விஷயங்கள் குறித்து போப் உடன் பேசினேன். இந்தியாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்' என, சமூக வலைதள பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2013ல் போப்பாக பொறுப்பேற்ற பிரான்சிஸை, இந்திய பிரதமர் ஒருவர் சந்திப்பது இதுவே முதல் முறை.கடைசியாக 1999ல், அப்போது போப்பாக இருந்த இரண்டாவது ஜான் பால் நம் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமராக, பா.ஜ.,வைச் சேர்ந்தவாஜ்பாய் இருந்தார்.
போப் உடனான மோடியின் சந்திப்பு 20 நிமிடங்கள் நடக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் பரவல், வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாடு பிரச்னை உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement