இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 31, 2021 | Added : அக் 31, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்போதை குற்றவாளிகளுக்கு 'ஜாமின்'மும்பை: போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட மூன்று பேருக்கு, மும்பை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில், போதை பொருள் விற்பனை செய்த ஆச்சித் குமார் உட்பட மேலும் ஏழு குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி படேல் நேற்று ஜாமின் வழங்கி
இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்,

இந்திய நிகழ்வுகள்

போதை குற்றவாளிகளுக்கு 'ஜாமின்'

மும்பை: போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட மூன்று பேருக்கு, மும்பை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில், போதை பொருள் விற்பனை செய்த ஆச்சித் குமார் உட்பட மேலும் ஏழு குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி படேல் நேற்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைதான 20 பேரில் இதுவரை 12 பேருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

கொள்ளையர் சுட்டுக்கொலை

சித்திரகூடம்: உத்தர பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் கவுரி யாதவ் என்ற கொள்ளையரை பிடித்துக் கொடுக்கும் நபருக்கு 5.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று, இங்குள்ள மண்டவ் வனப் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைக்கவே, அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். யாதவுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், கவுரி யாதவ் சுட்டுக்கொல்லப்பட்டார்

சாலை விபத்து: 2 பேர் பலி

புஜ்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மணல் லாரி மீது, எதிரில் வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. லாரிகளில் இருந்த டிரைவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகளை கொலை செய்த தந்தை

கத்கோடம்: உத்தரகண்டின் நைனிடால் மாவட்டத்தில் கைநாத், 21, என்ற பெண், சல்மான், 24, என்பவரை, இரண்டு மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டனர். கோபத்தில் இருந்த பெண்ணின் தந்தை சலீம் நேற்று முன்தினம் இரவு, தன் மகனுடன் சென்று, தன் மகளையும், மருமகனையும் கத்தியால் குத்தினார். இதில், அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். சல்மானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சலீமை போலீசார் தேடி வருகின்றனர்

திருட வந்தவர் சுட்டுக்கொலை

லுாதியானா: பஞ்சாபின் லுாதியானா மாவட்டத்தில் தங்க கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்குள் நேற்று காலை துப்பாக்கி ஏந்திய மூன்று கொள்ளையர்கள் நுழைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பாதுகாவலர் களுக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு திருடன் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழக நிகழ்வுகள்
மூவருக்கு குண்டாஸ்
திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம், பெரியமலையூர் அருகே பள்ளத்துபட்டி பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் 36, ஆறுமுகம் 27, முத்தயா என்ற முத்துக்கண்ணன் 42, ஆகியோர் கடந்த செப். 26 ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை என்பரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் குண்டாஸில் சிறையில் அடைக்க கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.


latest tamil newsசாலையோரம் கிடந்த குழந்தை

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே சாலையோரம் கிடந்த ஆண் குழந்தையை கண்டெடுத்த திருநங்கை, அரசிடம் ஒப்படைக்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தொரவி காலனியைச் சேர்ந்தவர் மது, 29; திருநங்கை. இவர், 27ம் தேதி இரவு 11:00 மணியளவில் வி.சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்றார். அப்போது, குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையை மது எடுத்து தன் வீட்டிற்கு கொண்டு வந்து பராமரித்து வந்தார். அங்குள்ள கிராம சுகாதார செவிலியர் ராகிணியிடம் குழந்தை கிடைத்த விபரத்தைக் கூறி சான்றிதழ் தருமாறு நேற்று கேட்டுள்ளார்.

இந்த தகவலை செவிலியர், வட்டார மருத்துவ அலுவலர் வினோத் என்பவருக்கு தெரிவித்தார்.தாசில்தார் தமிழ்ச்செல்வி, குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர் நேரில் விசாரணை நடத்தினர்.குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி குழந்தையை தருமாறு கேட்டனர்.குழந்தையை தான் வளர்க்கப் போவதாகவும், தாய் வந்து கேட்டால் மட்டுமே தருவேன் எனவும் திருநங்கை மது பிடிவாதம் செய்தார்.நீண்ட நேர பேச்சுக்கு பின் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் முன், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பள்ளி வளாகத்தில் லீலை: காதல ஜோடிக்கு டி,சி.,
தர்மபுரி-பள்ளி வளாகத்தில் காதல் லீலையில் ஈடுபட்ட மாணவ - மாணவிக்கு, 'டிசி' கொடுத்து பள்ளி நிர்வாகம் வெளியேற்றியது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளியின், 10ம் வகுப்பு மாணவரும், ஒரு மாணவியும், பள்ளி வளாகத்தில் கடந்த சில நாட்களாக முத்தம் கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த வீடியோ, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையறிந்த பள்ளி நிர்வாகம், இருவரின் பெற்றோரை அழைத்து, சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் மாணவிக்கு, 'டிசி' கொடுத்து வெளியேற்றினர். 'காதல் லீலையில் ஈடுபட்ட மாணவ - மாணவிக்கு மனரீதியான கலந்தாய்வு நடத்தி, அவர்களின் பள்ளி கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.


latest tamil news


சென்னையில் சிக்கிய மாவோயிஸ்ட் ஜார்க்கண்ட் போலீசாரிடம் ஒப்படைப்பு

சென்னை-சென்னையில் கைதான மாவோயிஸ்ட் பயங்கரவாதியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், ஜார்க்கண்ட் போலீசார் அழைத்து சென்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரைடாலி மாவட்டம், புச்சாடி கிராமத்தைச் சேர்ந்த சுக்கர் கஞ்சு, 30; இவர் மீது ஜார்க்கண்ட் போலீசில், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு மாவேயிஸ்ட்டாக செயல்பட்டுள்ளார். ஆறு மாதமாக தலைமறைவாக இருந்துள்ளார். வழக்கு ஒன்றில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், ஜார்க்கண்ட் போலீசார் சுக்கர் கஞ்சுவின் மனைவி மொபைல் போனை கண்காணித்தனர்.கட்டுமான தொழிலாளிஅப்போது, சுக்கர் கஞ்சு, சென்னையில் எண்ணுார் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு கட்டுமான பணியில், கட்டுமான தொழிலாளியாக வேலை பார்ப்பது தெரியவந்தது.

இது குறித்து, ஜார்க்கண்ட் போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.எண்ணுார் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார், சுக்கர் கஞ்சுவை, இரு தினங்களுக்கு முன் பிடித்து விசாரித்தனர். சுக்கர் கஞ்சு, ஹிந்தி மட்டுமே பேசியதால், அம்மொழி தெரிந்த காவலர் ஒருவர் உதவியுடன் விசாரணை செய்யப்பட்டது.விசாரணையில், சுக்கர் கஞ்சு ஜார்க்கண்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த வினோத் முண்டா என்பவர் மூலமாக, தீபக் யாதவ் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும், மாவோயிஸ்ட் கும்பலுடன் இணைந்து ௨௦௧௯ முதல் பணியாற்றிஉள்ளார்.மாவோயிஸ்ட் குழுவிற்கு வழிகாட்டுபவராகவும், உணவு சமைத்து கொடுத்தும் வந்துள்ளார்.

துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றிருக்கும் அவர் மீது, மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்து, ஜார்க்கண்டில் பணம் கேட்டு மிரட்டி தராததால், 'பொக்லைன்' இயந்திரங்களை எரித்து, சாலையை சேதப்படுத்தியது உள்ளிட்ட, 12 வழக்குகள் உள்ளன.வழக்கு ஏதும் இல்லைமே மாதம், ஜார்க்கண்டிலிருந்து தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, ரயிலில் சென்னைக்கு வந்து, சரவணன் என்பவரிடம் ஒப்பந்த தொழிலாளியாக, எண்ணுாரில் வேலை பார்த்தது தெரிய வந்தது. இவர் மீது, தமிழகத்தில் வழக்கு ஏதும் இல்லை.நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்த ஜார்க்கண்ட் போலீசாரிடம், சுக்கர் கஞ்சு ஒப்படைக்கப்பட்டார்.

பின், திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை, ஜார்க்கண்டிற்கு அழைத்து சென்றனர்.வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கு வருபவர்களிடம், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்னே, பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும், வாடகைக்கு வீடு கொடுக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். சந்தேகம் படும் வகையில் யாராவது இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, சென்னை காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-அக்-202111:59:45 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don't repeat the same comments
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X