பொது செய்தி

இந்தியா

நடிகர் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Updated : அக் 31, 2021 | Added : அக் 31, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பெங்களூரு: -மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் முழு மரியாதையுடன் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், 46, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் பெங்களூரில் காலமானார். அவரது உடல் கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

பெங்களூரு: -மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் முழு மரியாதையுடன் பெங்களூருவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.latest tamil news


முழு அரசு மரியாதையுடன் நடந்தது | Puneethkumar | Funeral | Kannadacinema | Dinamalar


கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், 46, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் பெங்களூரில் காலமானார். அவரது உடல் கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மைதானத்தின் வெளிபுறத்தில் 5 கி.மீ., துாரம் வரை ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். தமிழ் நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா, அர்ஜுன், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, ஜீனியர் என்.டி.ஆர்., உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


latest tamil newsஉயர்கல்வி படிக்க சென்ற புனித் மூத்த மகள் திரிதி நேற்று மாலை அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பினார். தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.புனித் தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மா ஆகியோரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அருகிலேயே, புனித் உடல் இன்று காலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்கள், அவர் உடல் வைகக்கப்பட்ட மைதானம் வெளியே கூடினர்.மைதானத்தை சுற்றியுள்ள கட்டடங்களில் மேற்கூறையில் இருந்தவாறு ரசிகர்கள், புனித் ராஜ்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
31-அக்-202118:02:17 IST Report Abuse
சீனி புனித் ராஜ்குமார் என்ற சிறந்த நடிகரை, எல்லாவற்றையும் விட ஒரு சிறந்த மனிதநேயரை கர்நாடகா இழந்துவிட்டது என்பது உண்மை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-அக்-202113:46:59 IST Report Abuse
Vena Suna கூட்டம் கொரோனாவிற்கு கொண்டாட்டம். எனினும், புனித் சாந்தி அடைய அஞ்சலி.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். கூத்தாடிகளுக்கெல்லாம் அரசு மரியாதை எதற்காக??. எல்லாம் வோட்டு பிச்சைக்காகத்தான்!!.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
31-அக்-202113:32:23 IST Report Abuse
 Muruga Velஎல்லையில் பாதுகாப்பு படையினர் தினம் தினம் இறப்பவர்களை விட காயமுற்றவர்கள் இன்னமும் பரிதாபத்துக்கு உரியவர்கள் ...ஒரு MLA கூட சென்று பார்ப்பதில்லை...
Rate this:
கிச்சாமி - மங்கலம்,இந்தியா
01-நவ-202101:08:08 IST Report Abuse
கிச்சாமி//கூத்தாடிகளுக்கெல்லாம் அரசு மரியாதை எதற்காக??// ஐயா. இவர் எத்தனை ஏழைக்குழந்தைகளைப் படிக்கவைத்து வருகிறார், எத்தனை அனாதை ஆசிரமங்கள் இவரது நண்கொடையால் நடக்கின்றன என்றெல்லாம் தெரியாமல் தப்பான வார்த்தைகளைக் கொட்டவேண்டாம். தவறானவர்களைக் குறித்துக்கூட அவர்கள் இறந்தபின் குறையாகப் பேசாமல் விலகுவதே நாகரீகம் என்றிருக்கும் சமூகத்தில், ஒரு நல்லவரை, சமூகத்துக்கு தொண்டாற்றிவந்த ஒரு நல்லவரை எதற்காக இகழவேண்டும்? அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X