புதுடில்லி: ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. சிலர் இவற்றை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடுகின்றனர். ஒரு முன்னாள் ஜனாதிபதி, இப்படி கிடைத்த விலை உயர்ந்த அன்பளிப்புகளை தன் வீட்டிற்கே எடுத்துச் சென்றுவிட்டார்.

இந்த விஷயத்தில் பிரதமர் மோடி புதிய பாணியை பின்பற்றி வருகிறார். தனக்கு கிடைக்கும் அனைத்து பரிசுகளையும் ஏலம் விடுகிறார். இதன் வாயிலாக கிடைக்கும் பணம், அரசு கஜானாவிற்கு செல்கிறது. எவ்வளவு பணம் ஏலத்தினால் கிடைத்தது என அனைத்து விபரங்களையும் தன் இணையதளத்தில் பதிவிட்டு விடுகிறார் மோடி.
சமீபத்தில் மோடி செய்த ஒரு விஷயம் அதிகாரிகள் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 1967 - 2014 வரை மத்திய அரசுக்கு வந்த பழைய கடிதங்கள் -கட்டு கட்டாக சாஸ்திரி பவன், உத்யோக் பவன் என மத்திய அரசின் அலுவலகங்களில் இடத்தை அடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.'இவற்றை ஆய்வு செய்து பழைய பேப்பர் கடைக்கு போட்டு விடுங்கள்' என, உத்தரவிட்டாராம் மோடி.ஒரு மூத்த அதிகாரி தலைமையில் ஒரு குழு இந்த பழைய குப்பையை ஆராய்ந்து கடைக்கு போட்டது. பல லாரிகளில் இந்த குப்பை ஏற்றிச் செல்லப்பட்டது. இதன் வாயிலாக அரசுக்கு 4.5 கோடி ரூபாய் கிடைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE