சரியாக கேட்டீர்கள். தமிழர் என்பர், திராவிடர் என்பர். ஆனால், ஹிந்து என்று சொல்ல மாட்டார்களாம்... என்ன தயக்கம்?

Added : அக் 31, 2021 | கருத்துகள் (38) | |
Advertisement
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு: ஹிந்து என்று சொல்லி, பி.சி., என்றும், எம்.பி.சி., என்றும், எஸ்.சி., என்றும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற்று விட்டு, வெளியில் ஹிந்து என்று சொல்ல என்ன வெட்கம்?சரியாக கேட்டீர்கள். தமிழர் என்பர், திராவிடர் என்பர். ஆனால், ஹிந்து என்று சொல்ல மாட்டார்களாம்... என்ன தயக்கம்?தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு
கிருஷ்ணசாமி, பி.ஆர்.பாண்டியன், கருணாஸ், சீமான், எஸ்.ஜெயக்குமார், அர்ஜுன் சம்பத், திருமாவளவன், ரூபேஷ்குமார், பழ.நெடுமாறன், மா.ராதாகிருஷ்ணன்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு: ஹிந்து என்று சொல்லி, பி.சி., என்றும், எம்.பி.சி., என்றும், எஸ்.சி., என்றும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற்று விட்டு, வெளியில் ஹிந்து என்று சொல்ல என்ன வெட்கம்?


சரியாக கேட்டீர்கள். தமிழர் என்பர், திராவிடர் என்பர். ஆனால், ஹிந்து என்று சொல்ல மாட்டார்களாம்... என்ன தயக்கம்?


தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்துவதற்கு, பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.


latest tamil newsஅண்டை மாநிலங்களுடன் நல்லுறவுக்கு நதிகள் தான் இடையூறாக அமைந்துள்ளன என்பதில், முல்லை பெரியாறு அணை நல்ல உதாரணம். எனினும், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான கம்யூ.,க்கள் ஆளும் கேரளாவுடன் பேசி, இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும்!முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் பேட்டி: சமூக நீதி கட்சி என தெரிவிக்கும் தி.மு.க., சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய அரசு ஒரு சாரருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கியது. அதை மாற்றி அனைத்து சமூகத்திற்குமான அரசாக இந்த அரசு செயல்பட வேண்டும்.


இப்படிக் கூறுவதை விட, 'ஒதுக்கீடே தேவைப்படாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்' என வேண்டிக் கொள்ளுங்களேன்!நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ள, 'இல்லம் தேடி கல்வி' என்ற புதிய திட்டம், கல்வியைக் காவிமயமாக்கும், பா.ஜ.,வின் மறைமுகத் திட்டம். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரை தன்னார்வலர்கள் என்ற பெயரில், கல்விக் கூடங்களில் நுழைக்க வைக்கும் முயற்சி.


எந்த மாற்று சிந்தனையும் இருக்கக் கூடாது என்ற அடாவடி கொள்கை எத்தனை நாட்களுக்குத் தான் செல்லுபடியாகும் பார்ப்போம்!மாநில சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.ஜெயக்குமார் பேட்டி: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் போன்றவற்றை தடுக்கும் பணியில் 8,000 ஆய்வாளர்கள் பணி புரிந்தனர். இன்றைக்கு 2,700 பேர் மட்டுமே உள்ளனர். கொரோனா ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டோம். எனினும் பதவி உயர்வு வழங்கவில்லை; காலி பணியிடங்களை அரசு நிரப்ப வில்லை.


கொரோனா வந்தால், சுகாதாரப் பணியாளர்களை தேடுவதும், அதன் பின் புறக்கணிப்பதும் சரியல்ல!


ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேட்டி: 10 ஆண்டுகளாக அறங்காவலர்களை நியமிக்காமல் அதிகாரிகள் கோவில்களை நிர்வாகம் செய்து வந்துள்ளனர். கோர்ட் உத்தர விட்டதும் அறங்காவலர்களை நியமிக்க அரசு அறிவிப்பு செய்துள்ளது. அரசியல்வாதிகள், ஜாதி தலைவர்களை தவிர்த்து, பக்தர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.


அறங்காவலர்கள் உண்மையான அறத்தின் காவலர்களாக இருக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மிகச் சரியாக செய்ய வேண்டும்!


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: நாங்கள், 2010ல் நடத்திய தமிழர் இறையாண்மை மாநாட்டில், மாநில அரசுகளுக்கு தனிக்கொடி வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம். நவம்பர் -1 அன்று, தமிழர் இறையாண்மை நாளாகக் கடைப்பிடிப்போம்.


இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட, ஜி.எஸ்.டி., என்றால் என்ன என்பதைப் புரிந்துக் கொள்ள முயற்சிக்கலாமே!


மீனவ மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் ரூபேஷ்குமார் பேட்டி: தனியார் கப்பல்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்கப்படுகிறது. ஆனால், ஏழை மீனவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படுவதில்லை. வரிகள் இன்றி வழங்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.


கடல் மேல் பிறந்து, கண்ணீரில் மிதக்கும் மீனவர்கள் வாழ்க்கையை உயர்த்தா விட்டாலும், மேலும் தாழ்த்தாமல் இருக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை: பிளவுப்பட்டு கிடந்த தமிழகம், முதல் முதலாக, 1965 நவம்பர் 1ல் ஒன்றுபட்ட தமிழகமாக பிறந்தது. அந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இது தமிழர் கடமையாகும்.


நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்... முதல்வரின் குரலாக ஒலிக்கும் சுப.வீரபாண்டியன், ஜூலை 18ல் தான் கொண்டாட வேண்டும் என்கிறாரே!


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: நாட்டின் முக்கிய தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்க, இஸ்ரேலின், 'பெகாசஸ்' என்ற உளவு செயலி பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை ஆராய, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு விரைந்து விசாரித்து, அதன் பின்னணியில் இருந்தது யார் என்பதை தெரிவிக்க வேண்டும்.


உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள வல்லுனர் குழு, உண்மையை வெளிக்கொண்டு வரும். அப்போது யார் யார் சிக்கப் போகின்றனரோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது!


அறப்போர் இயக்க மாநில குழு உறுப்பினர் மா.ராதாகிருஷ்ணன் அறிக்கை: கடந்த 2ல் தமிழகத்தில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்கள் பெயரளவுக்குத் தான் நடத்தப்பட்டுள்ளன. கிராம சபை விதிகள் அந்த கூட்டங்களில் பின்பற்றப்படவில்லை.


நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, 'மக்களை தேடி' போன்ற நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கொஞ்சம் கூட கிராம சபை கூட்டங்களுக்கு வழங்கப்படவில்லை என்கிறீர்களோ?புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-அக்-202121:04:55 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சீவகசிந்தாமினி , காலத்தில் எல்லாம் தமிழ் தானே இருந்துது ஹிந்து எப்போ வந்தது சொல்லு வந்தேறி ஆரியன் வந்து ஆங்கிலேயரிடம் தமிழன் காட்டிக்கொடுத்து ஹிந்து என்று இல்லாத ஒன்றை சொன்னால் , தமிழ்நாடு தமிழருக்கே, ஆரியன் நாடோடி அவனுக்கு நாடு இல்லை மொழி இல்லை அப்புறம் என்ன
Rate this:
Cancel
31-அக்-202120:48:38 IST Report Abuse
 kulandai kannan கர்நாடக அணை களைத் திறக்க வேண்டும் என்றும், முல்லை பெரியாறு அணையைக் திறக்கக் கூடாது என்றும் போராடுவதுதான் பி.ஆர். பாண்டியன் போன்ற கூமட்டைகளின் அறிவு.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
31-அக்-202119:38:54 IST Report Abuse
spr எந்த மாற்று சிந்தனையும் இருக்கக் கூடாது என்ற அடாவடி கொள்கை எத்தனை நாட்களுக்குத் தான் செல்லுபடியாகும் மக்களுக்கு உண்மையான கல்வியறிவு கூடாது என்பதுதான் எல்லா தலைவர்களும் விரும்புவது இருந்தால் தலைவன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் படித்தவர்களாகவும் இருக்க வேண்டும் ஆனால் பகுத்தறிவு வளரக்கூடாது பகுத்தறிவு உள்ளவராக அறியப்பட வேண்டும் ஆனால் அதற்கேற்றபடி சிந்திக்கக் கூடாது அதாவது சமச்சீர் கல்வி போல எல்லோரையும் ஒரே மாதிரி சிந்திக்க அனுமதிக்கக் கூடாது நாடு முன்னேற்றமடைய கல்வி தேவையா என்பது கேள்வியல்ல தலைவராகிய நாம் முன்னேற மக்களுக்கு கல்வி தேவையா உயிருள்ள மனிதனாக இருப்பவனுக்கு ஏதோ ஒரு மொழியில் எழுத படிக்க பேச தெரிந்தால் போதாதா சிந்திக்கவும் வேண்டுமா - இதனை வெற்றிகரமாக கடந்த அறுபது வருடங்கள் நடத்திக் காட்டியது நம் கழக ஆட்சிகள் இன்னும் என்ன பார்க்க வேண்டும் இது தொடரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X