ஒற்றுமையாக இருந்தால் முன்னேறலாம்: பிரதமர் மோடி

Updated : அக் 31, 2021 | Added : அக் 31, 2021 | கருத்துகள் (44)
Advertisement
புதுடில்லி: '' நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும்; லட்சியங்கள் நிறைவேறும்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது:நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. வரலாற்றில் மட்டும் சர்தார் படேல் வாழவில்லை. இந்தியர்களின்
NationalUnityDay, SardarPatel, PmModi, Narendramodi, Pmnarendramodi, Primeminister, பிரதமர், நரேந்திர மோடி, மோடி

புதுடில்லி: '' நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும்; லட்சியங்கள் நிறைவேறும்,'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது:
நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சர்தார் வல்லபாய் படேலுக்கு நாடு அஞ்சலி செலுத்துகிறது. வரலாற்றில் மட்டும் சர்தார் படேல் வாழவில்லை. இந்தியர்களின் மனங்களில் வாழ்கிறார்.புவியியல் ரீதியாக மட்டும் இந்தியா இணைந்த பகுதி கிடையாது. கொள்கைகள், தீர்மானங்கள், கலாசாரத்தால் ஒருங்கிணைந்த பகுதி. 135 கோடி மக்கள் வாழும் நிலத்தில், நமது ஆன்மா, கனவு மற்றும் லட்சியம் ஆகியவை ஒருங்கிணைந்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சமூக ரீதியாக வளர்ந்த, நமது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமானது, 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற உணர்வை தருகிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் முன்னேற முடியும்.


latest tamil news




நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நமது லட்சியம் நிறைவேறும். முன்னேறி செல்ல முடியும். இந்தியா எப்போதும் வலிமையாகவும், உணர்திறன் மிக்கதாகவும், வளர்ச்சி பெற்றதாகவும் திகழ வேண்டும் என விரும்பினார். அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைக்க வேண்டும் என விரும்பினார். நாட்டின் நலனுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தார்.அவர் கொடுத்த உத்வேகத்தால், நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் நாட்டிற்கு தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஒற்றுமையை போற்றும் கொள்கைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலமாகட்டும், வடகிழக்கு மாநிலங்களாகட்டும் அல்லது இமயமலை பகுதியில் உள்ள எந்தவொரு கிராமமாகட்டும், அது வளர்ச்சி பாதையில் செல்கிறது. நாட்டின் நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சியானது, புவியியல் மற்றும் வரலாற்றிற்கு இடையிலான இடைவெளியை குறைக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-நவ-202107:40:44 IST Report Abuse
ravi chandran பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 300/- வரும் போது ஒற்றுமை தானாக வந்துவிடும்
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
31-அக்-202121:35:37 IST Report Abuse
PKN மக்களாகியா நாம் ஒற்றுமையாக இருந்து எதையும் எதிர்க்காமல் எவ்வளவு வரி போட்டாலும் எதிர்ரப்பு தெரிவிக்காமல் அமைதியாக கட்டினோம் என்றால் அந்த கார்பரேட்டுகள் நன்றாக முன்னேறுவார்கள்
Rate this:
Cancel
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
31-அக்-202121:02:30 IST Report Abuse
M.RAGHU RAMAN ஒற்றுமையா.... பொறுங்கள் இன்னும் இரண்டு வருடம் கழித்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அவர்கள் ஒற்றுமையை காட்டுவார்கள், இப்பொழுதே உங்களையும், உங்கள் ஆட்சியையும் நினைத்து மக்கள் வெறுத்துவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X