ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசி வழங்கல்: பிரிட்டன் பெருமிதம்

Updated : அக் 31, 2021 | Added : அக் 31, 2021 | கருத்துகள் (5)
Advertisement
நியூயார்க்: ‛‛ஏற்கனவே 10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏழை நாடுகளுக்கு வழங்கி உள்ளோம்,'' என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியதாவது: சுமார் 2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தாண்டு இறுதிக்குள் பிற நாடுகளுக்கு வழங்க இருக்கிறோம்.
ஏழை நாடுகள், 10 கோடி, கோவிட், தடுப்பூசி இலவசம், பிரிட்டன், பெருமிதம்,

நியூயார்க்: ‛‛ஏற்கனவே 10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏழை நாடுகளுக்கு வழங்கி உள்ளோம்,'' என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.



காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியதாவது: சுமார் 2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தாண்டு இறுதிக்குள் பிற நாடுகளுக்கு வழங்க இருக்கிறோம். பிரிட்டன் முன்னரே 10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏழை நாடுகளுக்கு வழங்கி உள்ளது.


latest tamil news


கொரோனாவினால் உண்டான பொருளாதார இழப்பை சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட உலக நாடுகளின் தலைவர்கள் தயாராக வேண்டும்.உலகின் முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு கொரோனாவை முழுமையாக ஒழித்தாலே தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமூக இடைவெளி மற்றும் தடுப்பூசியால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-அக்-202118:41:39 IST Report Abuse
அப்புசாமி அடுத்த வருஷத்துக்குள்ள 500 கோடி தடுப்பூசி தயாரிச்சு உலக நாடுகளுக்கு இலவசமா குடுக்கப் போறோம். எங்களுக்கே நியூசா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
31-அக்-202117:26:27 IST Report Abuse
sankaseshan 200 வருஷமா இந்துயாவை கொள்ளை அடிச்சவன் உதவி பண்ணினதா பெருமை படுறான்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
31-அக்-202116:08:43 IST Report Abuse
S.Baliah Seer உங்களால் மக்களுக்கு எந்த நண்மையையும் செய்ய முடியவில்லை. கொரோனா பெயரில் தடுப்பூசி தேவையில்லை. எத்தனை காலம்தான் இப்படி மக்களை ஏமாற்றுவீர்கள்? பொருளாதார பிரச்சினையை சமாளிக்க முடியாவிட்டால் பதவியை ராஜனாமா செய்துவிட்டு ஓடும். மக்களிடம் பொய் பேசி பீதியைக் கிளப்பாதீர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X