தமிழ்நாடு நாள் விவகாரம்: தலைவர்கள் கருத்து என்ன?

Updated : நவ 02, 2021 | Added : அக் 31, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை:'ஜூலை 18 தமிழ்நாடு நாள் என்பது பொருத்தமாக இருக்காது; நவ., 1ஐ தமிழ்நாடு நாள் என்று அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: மொழிவாரியாக 1956- நவ., 1ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள்
 தமிழ்நாடு நாள் விவகாரம்: தலைவர்கள் கருத்து என்ன?

சென்னை:'ஜூலை 18 தமிழ்நாடு நாள் என்பது பொருத்தமாக இருக்காது; நவ., 1ஐ தமிழ்நாடு நாள் என்று அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்:

மொழிவாரியாக 1956- நவ., 1ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. தற்போதைய தமிழகம் நவ., 1ல் தோன்றியதன் அடிப்படையில், அந்த நாளை தமிழ்நாடு நாளாக அறிவிப்பது தான் பொருத்த மாக இருக்கும். குழந்தை பிறக்கும் நாள் தான் பிறந்த நாள்; பெண்ணின் கருப்பையில் குழந்தை உருவாகிய நாளை, குழந்தையின் பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஜூலை 18-ம்நாள் தமிழ்நாடு நாள் என்ற அறிவிப்பை திரும்ப பெற்று, நவ., 1ஐ தமிழ்நாடு நாள் என முதல்வர் அறிவிக்க வேண்டும்.

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி:

தமிழ்நாடு என அறிவிக்கப்பட்ட தினம் ஜூலை 18. அதனால் தான் அந்த சரியான நாளை, தமிழ்நாடு நாள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். என்றைக்கு தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டதோ, அந்த நாளை கொண்டாடுவதே சரியாக இருக்கும்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

அ.தி.மு.க., அரசு, நவ., 1ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்த ஒரே காரணத்திற்காக, அதை மாற்ற நினைப்பது தி.மு.க., அரசிற்கு அழகல்ல. நவ., 1ஐ தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவ., 1 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் நிலையில், தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வி.சி., தலைவர் திருமாவளவன்:

தமிழ்நாடு நாள் தொடர்பாக அரசாணை பிறப்பிக்கும் முன், அனைத்து கட்சித் தலைவர்கள், எல்லை மீட்பு போராளிகள், இன உணர்வாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் போன்றோரை அழைத்து கலந்தாய்வு செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்:

1956 நவ., 1ல், மொழிவாரி மாநிலம் அறிவிக்கப்பட்டது; 1967 ஜூலை 18ல் தமிழ்நாடு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடந்த 1956ல் இருந்து துவங்கிய வரலாறை, 1967ல் துவங்கினால் சிறப்பு பெறுமா; ஒரு மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்ட நாளை கொண்டாடுவதா அல்லது பெயர் வைத்த நாளை கொண்டாடுவதா?இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
01-நவ-202123:32:53 IST Report Abuse
J. G. Muthuraj மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக அறிவிக்கப்படவில்லையே மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பப்பட்ட மொழிவாரி மாகாணங்கள் ஆந்திரம், கேரளா, கர்நாடகம் தான் தங்கள் மாநிலங்களின் பிறப்புதினம் என அனுசரிக்க வேண்டும்....மதராஸ் மாகாணம் மாநிலமாக அப்படியே தான் இருந்தது.....மாகாணத்தின் பிறப்பு 22 ஆகஸ்ட்டு 1639 ஆகும்.....இச்சூழலில் பழையன கழிந்து புதியது புகுந்தது 18 ஜூலையில் தான்....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
01-நவ-202122:57:36 IST Report Abuse
RajanRajan கனி எக்கா ஒனக்கு என்ன புரிஞ்தாம்..ஹிஹிஹி
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
01-நவ-202122:51:42 IST Report Abuse
RajanRajan பெயர் சூட்டப்பட்டதோ ...இனியேல்லாம் DNA டெஸ்ட் வச்ச நாள் தான் விடியலின் பொறந்த நாள் கொண்டாட்டமாவுமோ...தமில் வாழ்க குல பெண்டிரே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X