டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசி., அணி வெற்றி

Updated : நவ 01, 2021 | Added : அக் 31, 2021 | கருத்துகள் (16)
Advertisement
துபாய்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார்.இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய

துபாய்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார்.



latest tamil news



இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிரடியாக ஆடிய மிட்செல் 49 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.


latest tamil news



வில்லியம்சன் 33 ரன்களும் கான்வே 2 ரன்களும் ஆட்டம் இழக்காமல் சேர்க்க, நியூசிலாந்து அணி 33 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.இன்றைய வெற்றியின்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jana - Chennai,இந்தியா
01-நவ-202114:42:13 IST Report Abuse
Jana World t20 பெருசு இல்லை ipl தான் வேணும். Follow t20 format to reduce total match.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
01-நவ-202114:36:42 IST Report Abuse
Raj நீங்க எப்படி வேணுமுன்னாலும் விளையாடுங்க, நாங்க ஒன்னும் சொல்லமாட்டோம், ஏதாவது சொன்ன தேச துரோகமுன்னு சொல்லிடுவானுங்க
Rate this:
Cancel
Surendran - singapore,சிங்கப்பூர்
01-நவ-202113:47:44 IST Report Abuse
Surendran இவனுங்க நோக்கம் விளம்பரத்தில் வரும் கோடிக்கணக்கான பணமும்,ஐபிஎல்லில் கிடைக்கும் பணமுமே இவனுங்களுக்கு மிக அதிகம். சர்வதேச போட்டி என்றால் தோற்றுப்போய் நாட்டின் மானத்தை வாங்குவானுங்க கேடுகெட்ட பயலுக. தோணி இருந்ததுபோல் இப்போது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X