எக்ஸ்குளுசிவ் செய்தி

பறிபோகும் பெரியாறு அணை உரிமை: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

Added : அக் 31, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
முல்லை பெரியாறு அணையில் நம் உரிமைகளை கேரள அரசு பறிப்பதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மதுரையில் அளித்த பேட்டி:பெரியாறு அணையில் கேரள பகுதிக்கு தற்போது திறந்து விடப்பட்டுள்ள நீர், வீணாகக் கடலில் கலக்கிறது. விவசாயத்திற்கு பயன்பட போவதில்லை. மவுனம் சாதிக்கிறார்ஆனால், ஆண்டிப்பட்டி
பறிபோகும் பெரியாறு அணை உரிமை: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

முல்லை பெரியாறு அணையில் நம் உரிமைகளை கேரள அரசு பறிப்பதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மதுரையில் அளித்த பேட்டி:

பெரியாறு அணையில் கேரள பகுதிக்கு தற்போது திறந்து விடப்பட்டுள்ள நீர், வீணாகக் கடலில் கலக்கிறது. விவசாயத்திற்கு பயன்பட போவதில்லை.



மவுனம் சாதிக்கிறார்



ஆனால், ஆண்டிப்பட்டி பகுதியில் தற்போதும் சில கிராமங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள், பெரியாறு அணை நீரையே நம்பியுள்ளனர்.
பெரியாறு அணை நீர் திறப்பு குறித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து வருகிறார். தற்போது அணை திறந்த போது, தமிழக அதிகாரிகள் இருந்ததாக கூறியுள்ளார். இதன் மூலம் கேரள அரசுடன் தி.மு.க., அரசும் கூட்டு சேர்ந்திருப்பதை ஒப்புக் கொள்கிறாரா?


உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், பெரியாறு அணையில் 136 அடி இருக்கும் போதே கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் நீர் திறந்து விட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகன் சப்பைகட்டு கட்டுகிறார்.பெரியாறு அணையில் தமிழக உரிமை பறிபோவதை கண்டித்து, தேனி கலெக்டர் அலுவலகம் முன், நவ., 8ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

*


அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பாண்டியன்:



நம் நிர்வாக கட்டுப்பாட்டில் பெரியாறு அணை இருக்கும் போது, தமிழக அமைச்சர்கள் அணைப் பகுதிக்கு செல்லாத நிலையில், கேரள அமைச்சர்கள் எந்த அடிப்படையில் சென்றனர். அரசியலமைப்பு சட்டத்தையே கேரள அரசு மீறுகிறது. பெரியாறு அணைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி நவ., 14ல் ஐந்து மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.




* காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி:



இப்போதே, கேரளாவில் அணைக்கு சொந்தம் கொண்டாடுவது போல் செயல்படுகின்றனர். இப்படியே விட்டால் நாளை அணையை இடிக்கக் கூட தயங்க மாட்டார்கள். எனவே, கேரள அரசுக்கு புத்தி புகட்ட, இங்கிருந்து அம்மாநிலத்திற்கு செல்லும் காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நிறுத்த, ஐந்து மாவட்ட விவசாயிகள் முன்வர வேண்டும்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
01-நவ-202119:16:38 IST Report Abuse
Girija நீ திறந்தாலும் திறக்கும் அவிக திறந்தாலும் திறக்கும் இது விஞ்ஞானம் துரை
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
01-நவ-202115:41:13 IST Report Abuse
a natanasabapathy தேர்தலுக்கு முன்பே தி மு க ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பக்கம் பக்கமாக எழுதினார்கள் அத்தனையையும் புறக்கணித்து விட்டு ஒட்டு போட்டு அதிக பலத்துடன் ஜெயிக்க வைத்துவிட்டு இப்போது புலம்புவது அறிவில்லாதது. 5 வருடத்துக்கு அனுபவியுங்கள்
Rate this:
Cancel
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
01-நவ-202114:28:34 IST Report Abuse
R MURALIDHARAN தண்ணீரை வைத்து அரசியல் வேண்டாம். நீர் மட்டம் அதிகமாவதால் கேரளாவிற்கு பயம். அவர்களும் அந்த நீரை வைத்து ஒன்றும் செய்யப்போவதில்லை. நமது மாநிலத்திலேயே நீர் தேக்ககள், நீர் நிலைகளை ஏற்படுத்தி பெரியாறு அணை தண்ணீரை தேக்கி வைக்கலாம். சமீபத்தில் கேரளாவில் மழை பெய்து நிறைய பாதிப்புகள் ஏற்பட்டதால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கலாம். பிறகு, இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தமிழகத்தில் இருந்து காய்கறிகளை அனுப்பிவிட்டால், பாதிப்பு நமது தமிழக விவசாயிகளுக்குத்தான். இப்போது தமிழக அரசு சரியாக கையாண்டு வருகிறது என்று நினைக்கின்றேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X