புதுடில்லி-'ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலிக்கு பிரதமர் மோடி பயணித்த சிறப்பு விமானம், பாகிஸ்தான் வான்வெளி வழியாகச் சென்றது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, ௨௦௧௯ ஆகஸ்ட் ௫ல் ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காஇந்நிலையில் 2019 செப்டம்பரில் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமரின் தனி விமானம் பறந்துச் செல்ல, பாக்., அரசிடம், நம் வெளியுறவு அமைச்சகம் அனுமதி கோரியது.ஆனால், பாகிஸ்தான் அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. இதையடுத்து டில்லியில் இருந்து மாற்று வழியில், அமெரிக்காவுக்கு பிரதமர் சென்றார்.

இத்தாலி
இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த 'ஜி ௨௦' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக ௨௮ம் தேதி இரவு டில்லியிலிருந்து தனி விமானத்தில் இத்தாலிக்கு பிரதமர் புறப்பட்டு சென்றார்.தங்கள் வான்வெளி வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்ல, பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பாக்., வான்வெளி வழியாக பிரதமரின் விமானம் இத்தாலி சென்றடைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE