ரயில் பயணியருக்கு கத்திக்குத்து; ஜப்பானில் 'ஜோக்கர்' அட்டூழியம்

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
டோக்கியோ-கிழக்காசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜோக்கர் போல உடையணிந்து வந்த ஒருவர், ரயில் பயணியரை கத்தியால் குத்தியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.ஜப்பானின் டோக்கியோ நகரின் பரபரப்பான ரயில் நிலையமான கியோவில் இருந்து ஷின்ஜூகு வரை செல்லும் ரயிலில், நேற்று ஏராளமான பயணியர் இருந்தனர். அப்போது ஒரு நபர் ஜோக்கர் போல உடையணிந்து வந்தார். அந்த நபர் திடீரென தான்

டோக்கியோ-கிழக்காசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜோக்கர் போல உடையணிந்து வந்த ஒருவர், ரயில் பயணியரை கத்தியால் குத்தியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.



latest tamil news


ஜப்பானின் டோக்கியோ நகரின் பரபரப்பான ரயில் நிலையமான கியோவில் இருந்து ஷின்ஜூகு வரை செல்லும் ரயிலில், நேற்று ஏராளமான பயணியர் இருந்தனர். அப்போது ஒரு நபர் ஜோக்கர் போல உடையணிந்து வந்தார். அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பயணியர் மீது சரமாரியாக குத்தினார்.

இதில், 10 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். மேலும், ரயில் பெட்டிக்கும் தீ வைத்தார். பயணியர் அலறியடித்து ஓடினர். ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news


பின் அந்த நபர் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் ரயில் நிலையத்தில் சாவகாசமாக நடந்து சென்றார். போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்; விசாரணை நடக்கிறது. காயம் அடைந்த ரயில் பயணியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் . அமைதி மார்க்கம் என ன்றுமே கத்தியை உபயோகிக்காது, புத்தியைத்தான் உபயோகிக்கும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-நவ-202113:41:38 IST Report Abuse
Vena Suna நம்ம கம்பெனி MD ங்க இவனை விட மெண்டல். திடீர்னு ஒரு 400 பேரை வேலையை விட்டு அனுப்புவான்.இவனுங்களை பாதாள சிறையில் போட்டு சாவடிக்கணும்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
01-நவ-202107:56:40 IST Report Abuse
R S BALA இது போல சைக்கோ பயலுங்க ஊர் முழுக்க நிறைய பேர் இருக்கானுங்க .. பாவம் அந்த பாதிக்கப்பட்ட அப்பாவி பயணிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X