'சைகோவ் - டி' கொரோனா தடுப்பூசியின் விலையை ரூ.265 ஆக நிர்ணயிக்க முடிவு

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி-'சைகோவ் - டி' தடுப்பூசியின் ஒரு 'டோஸ்' விலையை 265 ரூபாயாக நிர்ணயிக்க, அதன் தயாரிப்பு நிறுவனமான, 'சைடஸ் கேடிலா' சம்மதம் தெரிவித்துள்ளது.நம் நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. ஊசி இல்லாமல்

புதுடில்லி-'சைகோவ் - டி' தடுப்பூசியின் ஒரு 'டோஸ்' விலையை 265 ரூபாயாக நிர்ணயிக்க, அதன் தயாரிப்பு நிறுவனமான, 'சைடஸ் கேடிலா' சம்மதம் தெரிவித்துள்ளது.latest tamil news


நம் நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. ஊசி இல்லாமல் 'இன்ஜெக்டர்' எனப்படும் சிறப்பு கருவி வாயிலாக செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த சைகோவ் - டி தடுப்பூசிக்கு விலை நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வந்தன.இது தொடர்பாக சைடஸ் கேடிலா நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வந்தது.இந்நிலையில், சைகோவ் - டி தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் விலையை 265 ரூபாயாக நிர்ணயிக்க, அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


latest tamil news


அந்த மருந்தை செலுத்த பயன்படுத்தப்படும் கருவியின் விலை 93 ரூபாயாக உள்ளது. எனவே மொத்தமாக ஒரு டோசின் விலை 358 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.இந்த வாரத்திற்குள் இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-நவ-202121:19:56 IST Report Abuse
அப்புசாமி சத்திரத்து சோத்துக்கு தாத்தையங்கார் உத்தரவு எதுக்கு? மக்களிடம் உருவி, வசூல் செஞ்சு தடுப்பூசி கொள்முதல் செய்வாங்களாம். அதை இலவசமா போட்டேன்னு ஒருத்தர் மெடல் குத்திப்பாராம். அரசுப்பணத்தில் ஊசி போட்டோம்னுதான் அமெரிக்காவுலேர்ந்து, அண்டார்ட்டிகா வரைக்கும் சொல்றாங்க. இங்கெ மட்டும்தான் தனிநபருக்கு பஜனை பாடுறாங்க.
Rate this:
Cancel
K P SRIDHAR - Kumbakonam,இந்தியா
01-நவ-202111:42:26 IST Report Abuse
K P SRIDHAR அரசாங்கம் இலவசமாக தடுப்பூசி போட்டாலும் அதற்கான விலையை மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தர வேண்டும். அப்பொழுதுதான் மருத்துவ ஆராய்ச்சி மேம்படும். ஏதாவது எதிர்மறை கருத்து பேசுவதே சிலருக்கு வேலையாக இருக்கிறது.
Rate this:
Cancel
01-நவ-202107:29:27 IST Report Abuse
அப்புசாமி உலகுக்கே தடுப்பூசி இலவசம்னு பீத்திக்கிடறாங்களே... ஓ.. பிரதமர் சொந்த செலவுல வாங்கி எல்லோருக்கும் குடுப்பாரு.
Rate this:
01-நவ-202107:56:06 IST Report Abuse
Gopalakrishnan SudhakarPLEASE DON'T REPEAT THE SAME COMMENT...
Rate this:
Anvar - Singapore,இந்தியா
01-நவ-202112:09:06 IST Report Abuse
Anvarகோவேக்ஸின் கோன்விட்ஷேஇல்டு இத மாதிரி விலை நிர்ணயிக்கப்பட்டு அடசங்கம் அதை கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கியது வரலாறு .. அதே நடை முறை தான் இப்பொழுதும் இதுல அப்பு க்கு ஏன் சாமி வந்துச்சு .. எல்லாமே இலவசமா வேணும். ஆனா வேலை செய்ய மாட்டோம் வரி கட்ட மாட்டோம் கொத்தமல்லி வாங்க பைக் ல தான் போவோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X