ஐ.ஏ.எஸ்., போல நீதி சேவை; மாநிலங்களுடன் பேச மத்திய அரசு திட்டம்

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி-ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போல, கீழ் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு நீதிச் சேவையை துவக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் பேச, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து, மாநில சட்ட அமைச்சர்களுடன், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விரைவில் பேச உள்ளார். அனைத்திந்திய நீதி சேவையை துவக்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் பேச

புதுடில்லி-ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போல, கீழ் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு நீதிச் சேவையை துவக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் பேச, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.



latest tamil news


நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து, மாநில சட்ட அமைச்சர்களுடன், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விரைவில் பேச உள்ளார். அனைத்திந்திய நீதி சேவையை துவக்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணிகள் சேவைக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதுபோல, கீழ் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு தகுதியுள்ளோரை தேர்வு செய்வதற்காக, அனைத்திந்திய நீதி சேவையை துவக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


latest tamil news


இது தொடர்பாக பல முறை பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநிலங்களுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, சட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் பேசப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
01-நவ-202118:27:38 IST Report Abuse
Nachiar அரசியல் சார்பற்ற நீதித்த துறைக்கு அடித்தளம் இடப்படுகிறது. விரைவாக செயல் படுத்த வேண்டும். ஜெய் ஹிந்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-நவ-202117:17:27 IST Report Abuse
r.sundaram இதைவரவேற்க்க வேண்டும். இதனால் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் நிர்வாக பணிசுமை வெகுவாக குறையும். அவர்கள் அதில் செலவிடும் நேரத்தை நல்ல பயனுள்ள வழியில் செலவிட முடியும். மேலும் இதன் ஒரு படியாக, கீழ்மட்ட அளவில் இருந்து மேல்மட்டம் வரையில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் தனி அமைப்பு வேண்டும். தற்போது மாநில அளவில் எந்த கட்சி ஆட்சி அமைகிறதோ அது தனது கட்சியில் உள்ள வழக்கறிஞர்களை இந்த பதவிக்கு நியமிக்கும் போக்கை நிறுத்த முடியும்.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
01-நவ-202116:37:32 IST Report Abuse
Suppan நம்ம வீரமணி வீரபாண்டியன் திருமா போன்றவர்கள் கூப்பாடு போடப் போவதை பாருங்கள். ஓ இன்னொரு நீட் போன்ற கொடுமை என்று. போராட ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் சாதியினருக்கு சட்டம் என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் நீதிபதி ஆவதைத் தடுக்கும் முயற்சிதான் இது என்பார்கள். சட்டக் கல்லூரிகளில் அடி தடி போராட்டத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யாத மாணவர்களை இது பாதிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X