ஐ.ஏ.எஸ்., போல நீதி சேவை; மாநிலங்களுடன் பேச மத்திய அரசு திட்டம்| Dinamalar

ஐ.ஏ.எஸ்., போல நீதி சேவை; மாநிலங்களுடன் பேச மத்திய அரசு திட்டம்

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (17) | |
புதுடில்லி-ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போல, கீழ் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு நீதிச் சேவையை துவக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் பேச, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து, மாநில சட்ட அமைச்சர்களுடன், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விரைவில் பேச உள்ளார். அனைத்திந்திய நீதி சேவையை துவக்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் பேச

புதுடில்லி-ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் போல, கீழ் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு நீதிச் சேவையை துவக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் பேச, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.



latest tamil news


நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து, மாநில சட்ட அமைச்சர்களுடன், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விரைவில் பேச உள்ளார். அனைத்திந்திய நீதி சேவையை துவக்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணிகள் சேவைக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதுபோல, கீழ் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு தகுதியுள்ளோரை தேர்வு செய்வதற்காக, அனைத்திந்திய நீதி சேவையை துவக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


latest tamil news


இது தொடர்பாக பல முறை பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநிலங்களுடன் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, சட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் பேசப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X