வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (93)
Advertisement
மதுரை: சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்விஎழுப்பியதுடன் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
தமிழகம், வன்னியர்கள், இட ஒதுக்கீடு, அரசாணை, ரத்து, ஐகோர்ட், அதிரடி தீர்ப்பு,

மதுரை: சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்விஎழுப்பியதுடன் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில் எம்.பி.சி., பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் அ.தி.மு.க., முதல்வராக பழனிசாமி இருந்தபோது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.


latest tamil news


இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், எம்.பி.சி., பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25 மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: முறையாக தரவுகள் இல்லாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டா, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இதற்கெல்லாம் அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. ஆகவே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்தனர்.

அதேபோல், தற்போது வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆகையால் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.


மேல்முறையீடு

தீர்ப்பு வெளியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K Anbazhagan - Chennai,இந்தியா
02-நவ-202121:55:10 IST Report Abuse
K Anbazhagan சாதி மதம் இல்லை என்பது வெறும் ஏட்டில் மாத்திரமே உள்ளது தீர்ப்பு என்பது அவரவர் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் சாதகமாக உள்ளவர் போற்றுவர் பாதகமாக உள்ளவர் மனம் நொந்து போவார் ஒன்றை உருவாக்குவது கஷ்டம் அழிப்பது சுலபம் இது திட்டமிட்ட செய்த ஒன்று
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
02-நவ-202100:35:55 IST Report Abuse
Venkatakrishnan இது நடக்கும் என்று தெரிந்தும் அழகாக காயை நகர்த்திய திமுக வின் அரசியல் தந்திரம் பாராட்டப்பட வேண்டியது... ஒழியட்டும் இந்த ஜாதிகளும் அதன் கேடுகெட்ட சங்கங்களும்... நாட்டின் முன்னேற்றத்திற்கு இம்மி அளவு கூட பயனில்லை இந்தக் கோமாளிகளால்....
Rate this:
K Anbazhagan - Chennai,இந்தியா
03-நவ-202114:32:14 IST Report Abuse
K Anbazhaganஇனி சாதிகள் ஒழிய சாத்தியமே இல்லை...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
02-நவ-202100:35:26 IST Report Abuse
Venkatakrishnan இது நடக்கும் என்று தெரிந்தும் அழகாக காயை நகர்த்திய திமுக வின் அரசியல் தந்திரம் பாராட்டப்பட வேண்டியது... ஒழியட்டும் இந்த ஜாதிகளும் அதன் கேடுகெட்ட சங்கங்களும்... நாட்டின் முன்னேற்றத்திற்கு இம்மி அளவு கூட பயனில்லை இந்த முட்டாள் மங்குணிகளால்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X