தீபாவளிக்கு மறுநாள் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு

Added : நவ 01, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.,05) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, நவம்பர் 05 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு
தீபாவளி, மறுநாள், விடுமுறை, தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.,05) அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக, நவம்பர் 05 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.


latest tamil news


அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.,05 அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ.,20 அன்று பணிநாளாக அறிவித்தும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
01-நவ-202122:56:02 IST Report Abuse
S. Narayanan சுயநல சோம்பேறி அரசு. வெள்ளி கிழமை எதற்கு லீவு. டாஸ்மாக் விர்ப்பண வேண்டும் அதே சமயம் தனியா கமிஷன் அடிக்க. சனி ஞாயிறு தூக்கம் போட. அரசு வேலைகள் எவ்வளவு தேங்கி கிடக்கு தெரியுமா.
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
01-நவ-202122:35:07 IST Report Abuse
Ramanathan Muthiah எனக்கு ஒரு விடியல் யோசனை அரசு ஊளியர்களுக்கு வருடத்தில் 365. நாளும் விடுமுறை கொடுத்து, சம்பளமும் + போனஸ் கொடுத்து அவர்களை குஷி படுத்தலாம், நல்ல விடியல் அரசு ஓய்வு கிடைக்கும் நேரத்தில், போராட்டம் , ஆர்ப்பாட்டம் செய்து அரசை மிரட்டி இன்னமும் அதிக சம்பளமும், கூடவே டூமில் அரசுக்கு ஊழியர்கள் கூஜா தூக்கலாம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் சிநெட் கூட்டத்தில் நடந்தது போல, முதல்வர் படம் வைக்க வாழ்க டுமீல் மக்கள் வாழ்க 200.ரூபாய், குவாட்டர் மற்றும் பிரியாணி அடிமை திராவிட மாக்கான் உப்பிஸ்
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
01-நவ-202120:59:22 IST Report Abuse
padma rajan இது என்ன அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை புரியவில்லையே. ஒட்டுமொத்த விடுமுறை தினம் என்று சொல்லி விட்டுப் போகலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X