கோவிலில் பக்தர்களுக்கும் கடவுளுக்கும் இடையே இடைத்தரகர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : நவ 01, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (54)
Advertisement
சென்னை: ‛‛கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை,'' என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டாம்
கோவில், பக்தர்கள், இடைத்தரகர்கள், ஸ்ரீரங்கம், இடைத்தரகர்கள் வசூல், அறநிலையத்துறை, அறிக்கை தாக்கல், ஐகோர்ட் உத்தரவு,

சென்னை: ‛‛கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை,'' என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


latest tamil news


ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர ஏற்பாடு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (நவ.,1ம் தேதி) நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது மனுதாரர் சார்பில், ‛ஸ்ரீரங்கம் கோவில் இரண்டாவது பிரகாரத்தில் வலம் வர ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி பக்தர்களிடம் வெளியிலேயே 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுகிறது' எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் ''கோவில்களில் பக்தர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமம். மனுதாரர் குற்றச்சாட்டை மனுவாக அளிக்க வேண்டும். மேலும், அறநிலையத்துறை இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
02-நவ-202106:45:20 IST Report Abuse
Muguntharajan ஆமாம். அர்ச்சகர்கள் தேவையில்லை தான். கடவுள் பெயரில் பணம் சுருட்டல்.
Rate this:
02-நவ-202113:08:32 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்நீங்க ஏற்கனவே இருந்த அர்ச்சகர்களை சொல்றீங்களா? புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களை சொல்றீங்களா?...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
02-நவ-202100:27:01 IST Report Abuse
Venkatakrishnan இறைவனை வைத்து வியாபாரம் யார் செய்தாலும் அது அசுத்தமே...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-நவ-202123:45:16 IST Report Abuse
Vena Suna இடை தரகர்கள் ஒழிக்க...பாஜக வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X