கோவில் நில விற்பனையை தடுக்க பட்டாவில் தடை குறியீடு சேர்ப்பு

Updated : நவ 02, 2021 | Added : நவ 02, 2021 | கருத்துகள் (19)
Advertisement
சென்னை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், அதை மோசடியாக விற்பதை தடுக்க, சர்வே எண் வாரியாக பட்டாக்களில், தடை குறியீட்டை சேர்க்கும் பணியை வருவாய் துறை துவக்கி உள்ளது.தமிழகம் முழுதும், 44 ஆயிரத்து 285 கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோவில்களுக்கு, பல்வேறு தரப்பினர் தானமாக கொடுத்த நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. ஏராளமான

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், அதை மோசடியாக விற்பதை தடுக்க, சர்வே எண் வாரியாக பட்டாக்களில், தடை குறியீட்டை சேர்க்கும் பணியை வருவாய் துறை துவக்கி உள்ளது.



latest tamil news



தமிழகம் முழுதும், 44 ஆயிரத்து 285 கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோவில்களுக்கு, பல்வேறு தரப்பினர் தானமாக கொடுத்த நிலங்கள், கட்டடங்கள் உள்ளன. ஏராளமான சொத்துக்கள், அந்தந்த பகுதி மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, சொத்துக்களை மீட்கும் பணிகளை ஹிந்து சமய அறநிலையத் துறை முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், கோவில் சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களால் விற்கப்படுவதை தடுக்க, அவற்றின் பட்டாக்களில் சிறப்பு குறியீட்டை ஏற்படுத்தலாம் என ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய் துறைக்கு ஆலோசனை தெரிவித்தனர்.


latest tamil news



அதன் அடிப்படையில், வருவாய் துறையினர் சில அதிரடி நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர். இதன்படி, சென்னையில் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களின் பட்டாக்களில், சிறப்பு குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'இந்த சர்வே எண் தடை செய்யப்பட்டது' என்ற வாசகம், அந்த குறியீட்டில் இடம் பெற்றுள்ளது. நகர்ப்புற நில அளவை முடிந்த பகுதிகளில், இந்த நடவடிக்கை துவங்கி உள்ளது. மற்ற பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்த வருவாய் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால், சொத்து வாங்குவோர் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள், பட்டாவை ஆன்லைன் முறையில் சரிபார்க்கும் போது, தடைக்கான குறியீடு இருந்தால் விற்பனை நடக்காது. கோவில் சொத்துக்களை பாதுகாப்பதில், மிக முக்கிய முன்னேற்றம் இது என்று பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
02-நவ-202121:08:45 IST Report Abuse
jagan நிறைய நிலங்களுக்கு வேண்டும் என்றே தடை போட மாட்டார்கள் அப்புறம், தடையில்லை அதனால் பட்டா என்று சொல்வார்கள்/கோர்ட்டு எல்லாம். இதெல்லாம் விங்ஞான திருட்டில் ஒரு அங்கம்.
Rate this:
Cancel
Ravishankar - chennai,இந்தியா
02-நவ-202117:06:19 IST Report Abuse
Ravishankar இந்த பணியை பஞ்சமி நிலத்திற்கும் விரிவு படுத்தினால் மிகவும் நல்லது. முரசொலி நிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-நவ-202117:02:29 IST Report Abuse
sankaseshan ராமன் இருக்கிறது KK நகர் சகவாச தோஷம் நன்றாக வேலை செய்கிறது அத்வைத் என்ற புனிதமான பெயரில் துவேஷத்தை பரப்பாதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X