சிறு விவசாயிகளை மேம்படுத்த வளர்ச்சி திட்டம்: தமிழக கவர்னர் ரவி

Added : நவ 02, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
கோவை : ''சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின், 42வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நடந்தது. தமிழக கவர்னர் ரவி, 88 பேருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:மற்ற நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, நாம் வளர்ந்துள்ளோம். பசுமை
TN Governor, Ravi, RN Ravi, கவர்னர், ஆளுநர்

கோவை : ''சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின், 42வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நடந்தது. தமிழக கவர்னர் ரவி, 88 பேருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:மற்ற நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, நாம் வளர்ந்துள்ளோம். பசுமை புரட்சி ஏற்பட்டதற்கு, தன்னலமற்ற விஞ்ஞானிகளே காரணம்.

நாட்டின் உணவு உற்பத்தி உபரியாக இருந்தும், உணவு உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு முரண்பாடான சூழ்நிலை, பல ஆண்டுகளாக, தவறான விவசாய கொள்கைகளால் உருவாகியுள்ளது. சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார்.


latest tamil news


வேளாண் கல்வியை பொருத்தவரை, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த ஐந்து பல்கலைக் கழகங்களின் பட்டியலில், விரைவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமும் இடம் பெற வேண்டும். வேளாண் பல்கலையின் பயிர் வகைகள், மேலாண்மை தொழில்நுட்பங்கள், பண்ணை எந்திரங்களை ஏற்றுக் கொள்வதால், விவசாய சமூகத்துக்கு ஆண்டுக்கு, ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.இவ்வாறு, கவர்னர் ரவி பேசினார்.

மத்திய அரசு வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி துறை செயலர், திருலோச்சன் மொகபத்ரா பேசுகையில், ''உலகளவில் விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசன முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாறிவரும் காலநிலை, அதிகரிக்கும் வெப்பத்தால், வேளாண் துறை பல்வேறு சவால்களை சந்திக்க உள்ளது. அதை சமாளிக்க, நவீன தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டியது அவசியம்,'' என்றார்.

மொத்தம், 2,602 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார், கலெக்டர் சமீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
02-நவ-202117:33:05 IST Report Abuse
DVRR சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி???அப்போ இந்த மடியல் அரசு ஒன்னும் செய்யவில்லை என்று டிரெக்ட்டாக சொல்கின்றீர்களா என்ன
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
02-நவ-202111:00:31 IST Report Abuse
karuppasamy இதையே எத்தனை வருடங்களுக்கு சொல்லமுடியும் புதிதாக ஏதாவது சொல்லலாம். பதவி கொடுத்து விட்டார்கள் என்று உண்மையை மறக்காதீர்கள்
Rate this:
Cancel
02-நவ-202110:01:08 IST Report Abuse
ஆரூர் ரங் 2014 வரை இருந்த உரத் தட்டுப்பாடு முக்கியமாக யூரியா தட்டுப்பாடு இப்போது இல்லவே இல்லை👍. இயற்கை உரங்கள் உற்பத்திக்கு பல மடங்கு உதவி. விவசாய இயந்திரங்கள் ட்ராக்டர் விற்பனை 50 சதவீதம் உயர்வு. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நேரடி நிதியுதவி. இதெல்லாம் சாதனைகள. விவசாய கூலிகளது தட்டுப்பாடுட்டை நீக்க 100 நாள் வேலைத்😔 திட்டத்தை( ஓசிசோறு) மறு பரிசீலனை செய்யுங்கள். பயிரிடும் சீசனில் அதனை முழுமையாக நிறுத்துங்கள்.
Rate this:
ponssasi - chennai,இந்தியா
02-நவ-202117:59:07 IST Report Abuse
ponssasiநூறு நாள் வேலை திட்டம், விவசாயத்தையும் விவசாயியையும் பாழாக்கும் திட்டம். இது ஏட்டளவில் படித்தால் தெரியாது. கிராமங்களுக்கு சென்று பாருங்கள். அவர்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த விவசாயத்துடன் இணைத்துவிடலாம், ஆட்கள் தேவைப்படும் விவசாயி கிராம தலைவரிடம் தெரிவித்துவிட்டால் எவ்வளவு ஆட்கள் தேவை என்பதை அறிந்து விவசாய பணிக்கு அவர்களை அனுப்பவேண்டும், அந்த ஆட்களுக்கான கூலியை விவசாயி இடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அரசுக்கும் செலவு குறையும், விவசாய பணிக்கும் ஆட்கள் கிடைப்பார்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்து ஒரு எம்பிளாய்மென்ட் ஆபீஸ் போல இருக்கவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X