சேலம் - சென்னை சாலைக்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி; திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைக்குமா?

Updated : நவ 02, 2021 | Added : நவ 02, 2021 | கருத்துகள் (41) | |
Advertisement
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பான சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முட்டுக்கட்டை நீங்கிய நிலையில், திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில், சென்னை, கொச்சின் துறைமுகங்களை இணைக்கும் வகையில், எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்த
சேலம்,சென்னை, சாலை, சுப்ரீம் கோர்ட், பச்சைக்கொடி,   தமிழக அரசு,Chennai,Court,Salem,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,சென்னை,சேலம்,நீதிமன்றம்

சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பான சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முட்டுக்கட்டை நீங்கிய நிலையில், திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில், சென்னை, கொச்சின் துறைமுகங்களை இணைக்கும் வகையில், எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.


விவசாயிகள் எதிர்ப்புமுதல் கட்டமாக, சென்னை, தாம்பரம் படப்பையில் துவங்கி, சேலம் வரையிலான, 276.5 கி.மீ., துாரத்துக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயில் எட்டு வழிச்சாலை திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் குறித்து, 2018 பிப்ரவரி 25ல், தமிழக சட்டசபையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த திட்டம், தேசிய நெடுஞ்சாலை 179 - அ, 179 - ஆ என பெயரிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 கி.மீ., திருவண்ணாமலை மாவட்டத்தில், 123 கி.மீ., கிருஷ்ணகிரி, 2 கி.மீ., தர்மபுரி, 56 கி.மீ., சேலம் மாவட்டத்தில், 36 கி.மீ., துாரத்தில் இந்த சாலை அமைய இருந்தது.

திட்டம் அறிவிக்கப்பட்டதுமே, சேலம் உட்பட ஐந்து மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கினர். 2018 மே மாதத்தில் நில அளவீடு பணிகள் துவங்கிய நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பு தீவிரமானது. விவசாயிகளுக்கு ஆதரவாக, பா.ம.க., - கம்யூ., கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் இறங்கின.

அப்போதைய தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், 'விவசாயிகள் பாதிக்கப்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தியது.

இது தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கைது நடவடிக்கையை அடுத்து, இயற்கை ஆர்வலர்கள் பெயரில் களம் இறங்கிய மாவோயிஸ்ட்கள் பின்வாங்கினர். திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டின.

பா.ம.க., சார்பில், அக்கட்சியின் வக்கீல் பாலு உள்ளிட்ட விவசாயிகள், விவசாயிகள் போர்வையிலான அரசியல் கட்சியினர் 53 பேர், திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த உயர் நீதிமன்றம், 2019 ஏப்ரல் 8ல் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்தும், திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, எட்டு வார காலத்துக்குள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.


கேவியட் மனு தாக்கல்இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2019 மே 27ல் மேல் முறையீடு செய்தது. விவசாயிகள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதையடுத்து, எட்டு வழிச்சாலை திட்டம் என்பதை, பசுமை வழிச்சாலை திட்டம் எனவும், பாரத் மாலா பிரயோஜனா திட்டம் என்பதை, சாகர் மாலா திட்டம் எனவும் மாற்றம் செய்து, சுற்றுச்சூலுக்கோ, விவசாயிகளுக்கோ பாதிப்பு இல்லாமல் நிறைவேற்றுவதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.

மத்திய அரசு, எதிர்ப்பாளர்களின் மேல் முறையிட்டு மனுக்களை, 2020 டிசம்பர் 8ல் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் அமர்வு, எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளித்து, உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும்,திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டணத்தில் நிலம் வைத்துள்ள ஈரோடைச் சேர்ந்த யுவுராஜ், கடந்த ஜனவரி 7ல் மேல் முறையீடு செய்தார்.

அக்டோபர் 27ல் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கான்வில்கர், கவாய், கிருஷ்ணமுராரி அமர்வு, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இதன் மூலம், எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியதாக கூறிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், 'மீண்டும் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள்விரைவில் துவங்கும்' என்றனர்.

இது குறித்து, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் கூறியதாவது: எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், முறைப்படி அறிவிப்பு ஆணை வெளியிட்டு, நிலத்தை கையகப்படுத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்துவதோ, கையகப்படுத்தாமல் இருப்பதோ, அரசின் கொள்கை முடிவு. மாநில அரசு நிலத்தை கையகப்படுத்திய பிறகே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
அதே நேரத்தில், தி.மு.க., இந்த திட்டத்துக்கு பெயரளவிலேயே எதிர்ப்பு காட்டி வந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமா அல்லது மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டு, பணிகளை கிடப்பில் போடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் குழு -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-நவ-202121:08:48 IST Report Abuse
sankaranarayanan காவிரி டெல்டாவில், புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதிர் கட்சியாக இருக்கும்போது, விவசாயத்திற்கு ஆதரவாளர்கள் போல காட்டிக்கொண்டு . ஆட்சிக்கு வந்ததும், விவசாயத்திற்கு எதிரான திட்டத்தை ஆதரிப்பது - சென்னை சேலம் - எட்டு வழிச்சாலை அமைப்பதை முழுவதும் எதிர்த்வர்கள், இப்போது உச்ச நீதி மற்ற உத்திரவை அமல்படுத்தப்போவதுபோல காட்டிக்கொள்வது - கூடிய சீக்கிரமே தூத்துக்குடி ஸ்ட்ராலய்ட்டு ஆலை திறக்கவும் ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது (பணப்பெட்டி சென்றாகிவிட்டது) - கூடங்குளம் அனல்மின்சாரம் விரிவுபடுத்தலும் அங்கிகரிக்கப்படும் -டாஸ்மாக்கு கடைகளை மூடச்சொன்னவர்கள் இப்போது விரிவாக்கம் செய்து, மதுபான ஆறாக ஓடச்செய்வது - இவைகள் எல்லாம் சென்ற ஆட்சியில் இவர்களால் எதிர்க்கப்பட்டவைகள் இப்போது இவர்களே ஆதரிக்கிறார்கள். அற்புதம் இப்போது எதிர்கட்சியே கிடையாது. பிளவுபட்ட எதிர்கட்சிகளினால், அரசங்க நிர்வாகம் தந்திரமாக தடை நடைபெறுகிறது. இது அரசியல் சூழ்ச்சி விஞ்ஞான சூழ்ச்சி அ.தி.மு.க. இடம் இல்லை என்பது நிறுப்பனமாகிவிட்டது.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
02-நவ-202119:24:30 IST Report Abuse
Vijay D Ratnam இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிழைப்பு நடத்தியாக வேண்டும். கட்சியை அடுத்த தேர்தல் வரைக்கும் உயிர்ப்போடு வைத்துக்கொள்ள அவர்களுக்கு அரசியல் நடத்த ஏதாவது ஒரு விஷயம் தேவை. ஸ்டெர்லைட், கெய்ல், நீட், ஜிஎஸ்டி, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்று ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்து போராடியாக வேண்டும். ஒன்னும் கிடைக்கலையா பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக இங்கே பாப்பநாயகன் பாளையத்திலாவது ஒரு போராட்டம் நடத்தியாக வேண்டும். ஈராக்லயும், சிரியாலயும் போரை நிறுத்தவேண்டும்னு ஈரோட்டுலயும், சிந்தாதிரிப்பேட்டையிலும் சாலை மறியல் செய்து கண்டனம் தெரிவித்தாக வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கணும் என்று முடிவெடுத்துவிட்டால் இங்கே எட்டுவழிச்சாலை அல்ல ஒரு பஸ்டாண்டு கக்கூஸ் கூட கட்டமுடியாது. இங்கே இருக்கும் சந்து ஆக இருக்கட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆகட்டும், ரயில் பாதை ஆகட்டும் எல்லாமே விவசாய நிலத்தில்தான் அமைந்துள்ளது. என்ன ஒரு நல்ல விஷயம் என்றால் பாஜக ஆட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் பெரிதாக எதிர்ப்பு காட்டுவதில்லை. திமுக இந்த துண்டு துக்கடா கட்சிகளை உசுப்பிவிடுவைத்து போல நாறப்பொழப்பை அதிமுக செய்வதில்லை. மத்தபடி மரவெட்டி, சைக்கோ, திருமாவள்வன், ஆமைக்கறியான் இவங்களுக்கு இதைவிட்டா பொறவு பொழப்புக்கு இன்னா பண்றது.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-நவ-202118:30:00 IST Report Abuse
முக்கண் மைந்தன் அடுப்புக்கரி உள்ர நொழெஞ்ஜா 'அம்பது பர்செண்ட்' கண்பார்ம்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X