தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Updated : நவ 02, 2021 | Added : நவ 02, 2021 | கருத்துகள் (84) | |
Advertisement
வேலூர்: இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛‛தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,'' எனப் பேசியுள்ளார்.வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.142.16 கோடி செலவில் 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி
Tamil People, Stalin, TamilnaduCM, DMK, திமுக, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், இலங்கை தமிழர்கள், ஒரு தாய் மக்கள்

வேலூர்: இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛‛தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,'' எனப் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.142.16 கோடி செலவில் 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஒவ்வொரு முறை தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., அரசு இலங்கை தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை.


latest tamil news


இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். முகாம் வாழ் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்; நாம் அனைவரும் தமிழினத்தை சேர்ந்தவர்கள், கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. தி.மு.க., அரசு இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
03-நவ-202111:40:27 IST Report Abuse
raja சொல்றதுலதான் பெருமை....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-நவ-202122:20:35 IST Report Abuse
NicoleThomson இப்படி சொல்லி சொல்லியே இன்று எல்லார் தலைக்கும் குல்லாய் போட்டுடீங்க போஸ்டர் ஓட்டி அவர்களின் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று கூறும் சமத்துவம் புல்லரிக்குது , என்ன நடவடிக்கை எடுத்த்தீங்க முதல்வரே
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
02-நவ-202121:06:58 IST Report Abuse
Ramesh Sargam ஆனால், திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே முதல்வராக வரமுடியும் - வாரிசு பின் வாரிசாக... மற்ற அந்த ஒரு தாயின் பிள்ளைகள் வரவே முடியாது. என்னடா இது பித்தலாட்டம்...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X