கிளாஸ்கோ: 2030க்குள் காடுகள் அழிவைத் தடுக்க கிளாஸ்கோ மாநாட்டில் புதிய ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடந்த சிஓபி-26 மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். வரும் 2050ம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர். கார்பன் புகையை கட்டுப்படுத்தும் அதேநேரத்தில் காட்டு வளங்களை காப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு ஐநா., பருவநிலை மாற்ற கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. அதில் வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகம் முழுக்க உள்ள வனங்களைக் காக்கவும் மரங்கள் வெட்டுவதை தவிர்க்கவும் ஒப்பந்தம் இடப்பட்டது.
ஆனால் வணிக நோக்கத்துக்காக பல நாடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் வர்த்தக நோக்கத்துக்காக பல மரங்கள் வெட்டப்படுவதால் அந்நாட்டு அதிபர் போல்சனாரோ தீவிர விமர்சனத்திற்கு உள்ளானார்.
கிரீன்பீஸ் அமைப்பு கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை கூட்டத்தை விமர்சித்து இருந்தது. வரும் 2025ம் ஆண்டுக்குள் அமேசான் காடுகளில் உள்ள மரங்களில் 80 சதவீத மரங்களைக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து இந்த உறுதிமொழிகள் பொய்த்துப் போவதால் அடுத்தடுத்து உலக நாடுகள் காட்டு வளங்களை காக்க ஒப்பந்தம் இடுவதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

பிரேசில், இந்தோனேஷியா, காங்கோ, உள்ளிட்ட உலகில் 85 சதவீத காட்டு வளம் மிக்க நாடுகள் ஒப்பந்தம் ஒன்றை இட்டன. 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகள் நிதி அளிக்க முன்வந்துள்ளன. 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் காட்டு வளங்களை அழிக்கும் எந்த திட்டத்திற்கும் தாங்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்று உறுதி அளித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், முன் எப்போதும் இல்லாத அளவில் காட்டு வளங்களைக் காக்க இடப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் இது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE