கோல்கட்டா: மேற்குவங்கத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திரிணமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சி எம்.பி., சவுகதா ராய், ‛இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது,' எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்.,30ம் தேதி நடைபெற்றது. இன்று (நவ.,2) நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் காலியாக உள்ள தின்கடா தொகுதியில் 1.64 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், சண்டிபூரில் 64 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், கர்டஹா தொகுதியில் 93 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், கொஸாபா தொகுதியில் 1.43 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் திரிணமுல் காங்., வேட்பாளர்கள் அபார வெற்றிப் பெற்றனர். இது தொடர்பாக திரிணமுல் எம்.பி., சவுகதா ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பா.ஜ., அரசின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதைத்தான் தேர்தல் முடிவு காட்டுகிறது. நாங்கள் கடுமையாக போராடினோம். இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்தது போலவே அமைந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று எங்கள் கட்சி அறிவுறுத்தியது. அப்படியான வன்முறை எதுவும் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE