காவிரி- குண்டாறு இணைப்பு சர்வே பணி துவங்கியது! மேலூர்=கல்லல் கால்வாய் அமைக்க திட்டம்

Added : நவ 02, 2021 | |
Advertisement
சிவகங்கை : காவிரி_ குண்டாறு இணைப்பு திட்டம் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கானசர்வே பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரூர் மாவட்டம் மாயனுார் தடுப்பணையில் தேக்கி கதவணை மூலம் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,

சிவகங்கை : காவிரி_ குண்டாறு இணைப்பு திட்டம் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கானசர்வே பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரூர் மாவட்டம் மாயனுார் தடுப்பணையில் தேக்கி கதவணை மூலம் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் பாசன வசதிக்காக இத்திட்டம் 14 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்க அடிக்கல்நாட்டப்பட்டது.



தற்போது இத்திட்டத்தில் சருகனியாறு வடிநில கோட்டப்பகுதியில் மேலுார் முதல் கல்லல் வரையிலான கால்வாய் அமைக்கும் பணிக்கான நிலங்களைசர்வே செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த சர்வே பணிகள் நிறைவடைந்த பின்பு இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்து வழங்கும்படி அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திட்டமதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துகால்வாய் அமைக்கும் பணிகள் செய்யப்படவுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X