பல மாவட்டங்களில் பெய்யும் மழை காரணமாக, தமிழக மின் தேவை 1,500 மெகா வாட் வரை சரிவடைந்துள்ளது.
தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இது கோடை காலாமான நடப்பாண்டு ஏப்ரல் 10ம் தேதி, 16 ஆயிரத்து 845 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.
மழை காலத்தில் மின் தேவை, 12 ஆயிரம் மெகா வாட்டிற்கு கீழ் சரிவடையும். இருப்பினும் மழை சீசன் துவங்கியும் கடந்த வாரம் வரை, சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.
தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்றவை முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. இதனால், மாலையில் மின் தேவை, 14 ஆயிரத்து 500 மெகா வாட்டை தாண்டிய நிலையில், காலையில் 13 ஆயிரத்து 500 மெகா வாட் என்றளவில் இருந்தது.
நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் குறைந்தளவில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின்சாரமும் கிடைக்காததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது.
சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மின் தேவை 1,000 மெகா வாட் முதல் 1,500 மெகா வாட் வரை சரிவடைந்து, மாலையில் 13 ஆயிரத்து 500 மெகா வாட்டாகவும்; காலையில் 12 ஆயிரம் மெகா வாட் என்றளவிலும் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE