நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம்: தியேட்டர் சங்கத்தினர் கொந்தளிப்பு

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (62) | |
Advertisement
சென்னை: சட்டத்தை மீறி நடிகர் சூர்யா ரசிகர்கள், 'ஜெய் பீம்' படத்தை அரங்கத்தில் ஒளிபரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இதுபோல ஆபாச படங்களையும் போட்டால் என்னவாகும்' என்று தியேட்டர் சங்க நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள, 'ஜெய்பீம்' படம் நவ., 1ல் ஓ.டி.டி.,யில் வெளியானது. இப்படத்தை, அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தை மீறி,
Suriya, Jai Bhim, Actor Suriya, ஜெய்பீம்

சென்னை: சட்டத்தை மீறி நடிகர் சூர்யா ரசிகர்கள், 'ஜெய் பீம்' படத்தை அரங்கத்தில் ஒளிபரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இதுபோல ஆபாச படங்களையும் போட்டால் என்னவாகும்' என்று தியேட்டர் சங்க நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள, 'ஜெய்பீம்' படம் நவ., 1ல் ஓ.டி.டி.,யில் வெளியானது. இப்படத்தை, அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தை மீறி, திருப்பூர் குன்னத்துார் ஊராட்சியில், 'மினி ரசிகர்கள் காட்சி' என அரங்கிற்குள், சூர்யா ரசிகர்கள் திரையிட்டுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அவிநாசியில் உள்ள ஓட்டலில் நடக்க இருந்த ரசிகர்கள் காட்சி, புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது: உரிமம் பெற்ற தியேட்டர்களில் மட்டுமே, படங்களை வெளியிட வேண்டும். ஆனால், ‛ஜெய் பீம்' படத்தை, சூர்யா ரசிகர்கள் ஓட்டல் உள்ளிட்ட பொது வெளியில் திரையிட திட்டமிட்டனர். புகாரின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சூர்யா தயாரித்த படத்தை எங்கு வேண்டுமானாலும் வெளியிடட்டும்; அதைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை. எங்களை பொறுத்தவரை நான்கு வாரங்களுக்கு பின்னரே படங்களை, ஓ.டி.டி.,க்கு தர வேண்டும். அப்போது தான் தியேட்டரில் படம் ரிலீசாகும்.

பொதுவெளியில் ஜெய்பீம் வெளியிடுவதை சூர்யா ஏன் தடுக்கவில்லை?

கண்டனம் தெரிவிப்பதோ, தடை செய்வதோ எங்கள் வேலை அல்ல. மாறாக இந்த மாதிரி சட்டத்திற்கு புறம்பாக படங்களை வெளியிடக்கூடாது. எங்கு வேண்டுமானாலும் பட்டாசு கடை போட முடியுமா? உங்கள் சவுகரியத்திற்கு படங்களை, கண்ட இடங்களில் போட்டால் எப்படி; இன்று இந்தப்படம் வெளியானால், நாளை செக்ஸ் படங்களையும் இந்த மாதிரி வெளியிடுவர். கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் வீடியோ வந்த புதிதில், வீடியோ பார்லர் வைத்துக் கொண்டு படங்களை திரையிட்டனர். அதுபோல, தற்போது படங்களை அரங்கில் வெளியிட நினைக்கின்றனர்.


latest tamil news



இவ்வாறு போனால் சினிமா சட்டம் எதற்கு இருக்கிறது. 'டிவி' விளம்பரத்தில், காலையில் சூர்யா, 'காபி குடிங்கள்' என்கிறார்; அவர் தம்பி கார்த்தி, 'டீ குடிங்கள்' என்கிறார். 'நான் காபி, டீ குடிப்பதில்லை; அதனால் தான், 80 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன்' என்று, அவர்களின் தந்தை சிவகுமார் கூறுகிறார். இவர்கள் பணத்திற்காக முரண்பாடாக பேசத்தான் செய்வர். எங்களை பொறுத்தவரை, எங்களுக்கான வியாபாரம் எப்போதும் உண்டு; யாரையும் நாங்கள் வற்புறுத்துவதில்லை.

ஒவ்வொரு கால கட்டத்திலும், வெவ்வேறு வகையில் தியேட்டர் தொழிலுக்கு பாதிப்பு வந்தாலும், தியேட்டர் அனுபவம் என்றும் தோற்காது. தியேட்டரை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி வந்தால், நிச்சயம் தியேட்டர் தொழிலை யாரும் முடக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்தின் முன்னாள் நிர்வாகி அண்ணாமலை கூறுகையில், ''தீபாவளி முடிந்ததும் இதுகுறித்து பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சூர்யா ரசிகர்களை போல, மற்றவர்களும் ஆரம்பித்து விட்டால், அது தியேட்டர் தொழிலை நிச்சயம் பாதிக்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-நவ-202123:20:22 IST Report Abuse
முருகன் சினிமா எங்கு பார்க்கவேண்டும் என தனி மனிதன் தான் முடிவு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
03-நவ-202122:53:38 IST Report Abuse
ராம.ராசு ஒன்று இன்னொன்றாக மாறும். அந்த இன்னொன்று வேறொன்றாக மாறும். அனைத்திற்கும் இது பொருந்தும். ஒளி நாடாவும், கேசட்டுகளும் வழக்கொழிந்து போய்விட்டது. பெரிய அளவிலான ஸ்மார்ட் டிவி என்பது கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இருக்கும்படியாக குறைவாகக் கிடக்கிறது. பெரும்பாலான மக்கள் திரை அரங்குக்கு சென்று திரைப்படம் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார்கள். பெரிய அளவிலான ஸ்மார்ட் டிவியில் பார்ப்பதே கிட்டத்தட்ட திரை அரங்குகளில் பார்க்கும் அளவுக்கு இருப்பது மட்டுமல்ல... செலவும் குறைவு. வேறு வழியில்லை திரை அரங்கு உரிமையாளர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். காபி குடியுங்கள், டீ குடியுங்கள், காபி டீ குடிப்பது என்று நடித்தாலும்... "எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
03-நவ-202120:02:37 IST Report Abuse
sankar ஹிந்தியில் பேசும் ஒருவரை பிரகாஸ்ராஜ் அடிப்பதாக ஒரு காட்சி வருகிறது - தேவை இல்லாமல் வடஇந்தியர் தென்னிந்தியர் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார் - பிரகாஸ்ராஜ் எப்படி அதற்கு ஒத்துக்கொண்டார் - அந்த காட்சி நீக்கப்படவேண்டும் -
Rate this:
sridhar - Chennai,இந்தியா
04-நவ-202105:40:22 IST Report Abuse
sridharபிரகாஷ் ஏதோ நல்லவர் போலும் கேள்வி கேட்கிறீர்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X