விதவிதமா பட்டாசு.. விறுவிறு விற்பனை: மத்தாப்'பூ' சிதறும்... மனசு மகிழும்!

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | |
Advertisement
திருப்பூர்:ஆயிரம் காரணம் சொன்னலும், தீபாவளி என்றாலே பட்டாசு, கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வாணம் இன்றி, அந்த நாள் கடந்து செல்லாது என்று, குட்டீைஸ கேட்டுப்பார்த்தாலே தெரியும்.நாளை தீபாவளி கொண்டாடப்பட உ ள்ள நிலையில், திருப்பூரில், பட்டாசு ரகங்கள், விற்பனைக்காக குவிந்துள்ளன. பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. இந்தாண்டு வந்துள்ள 'பேன்ஸி' பட்டாசு ரகங்கள்
 விதவிதமா பட்டாசு.. விறுவிறு விற்பனை: மத்தாப்'பூ'  சிதறும்... மனசு மகிழும்!

திருப்பூர்:ஆயிரம் காரணம் சொன்னலும், தீபாவளி என்றாலே பட்டாசு, கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வாணம் இன்றி, அந்த நாள் கடந்து செல்லாது என்று, குட்டீைஸ கேட்டுப்பார்த்தாலே தெரியும்.நாளை தீபாவளி கொண்டாடப்பட உ ள்ள நிலையில், திருப்பூரில், பட்டாசு ரகங்கள், விற்பனைக்காக குவிந்துள்ளன.

பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. இந்தாண்டு வந்துள்ள 'பேன்ஸி' பட்டாசு ரகங்கள் குறித்து பார்க்கலாம்.'ட்டேரான்' ராக்கெட்இது ராக்கெட் வகை பட்டாசு என்றாலும், அதிக துாரம் சென்று வண்ண வண்ண பூக்களுடன் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தும். அதுவும், அதிகமான உயரத்துக்கு செல்லும் என்பது சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை'பப்பெட்' சக்கரம்தரைச்சக்கரம் போல சுற்றக்கூடியது.


இதன் மத்தியில் கயிறு உள்ளது. அதனை கையில் பிடித்து கொண்டால், மத்தாப்பு போல, வண்ணவண்ண பூக்களாக வெளிப்பட்டு, சுற்றும். இது வெடி கிடையாது. பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.'பிளை மெஷின்திரியை பற்ற வைத்தவுடன், விசில் சத்தத்துடன் வண்ணங்களை வாரியிறைக்கும் பேன்ஸி மத்தாப்பு. அதிலும், சற்று உயரம் வகை பூப்பூவாக மத்தாப்புகளை வெளியேற்றும். அதிலும், இருளை கிழித்து கொண்டு வண்ண ஜாலங்களை காட்டும்.'டினி கன்'முந்தைய காலங்களில், 'பென்சில்' என்ற ரகம், இப்போது 'டினி கன்' என, துப்பாக்கி வடிவத்தில் சிறுவர், சிறுமியரை கவரும் வகையில், வடிவமைத்துள்ளனர்.


துப்பாக்கி பிடித்து கொண்டு திரியை பற்ற வைத்தால், வெளிப்படும் ஒளிக்கற்றை ரம்மியமாக இருக்கும்.'லாலா' வாணம்தரையில் வைத்து பற்ற வைத்தவுடன், வெளிப்படும் வண்ண காகிதங்களை சிறுவர்களை உற்சாகத்தின் உச்சியில் கொண்டு சென்று நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும், பூக்கள் போல வண்ணங்கள் பல்வேறு வகையில் வெளிப்படும் என்று கூடுதல் சிறப்பு.



'கலர் பிளாஷ்''மூர்த்தி சிறியது என்றாலும், கீர்த்தி பெரியது' என்று சொல்வர். அதற்கேற்றவாறு, உருவத்தில் சிறியதாக இருக்கும், சத்தம் எழுப்பிவாறே வண்ணப்பொடிகளை துாவும் வகையில் உள்ள பேன்ஸி பட்டாசு இது. அதிலும், பச்சை, நீலம், சிகப்பு, மஞ்சள் என வண்ணங்களில் உள்ளது.'செண்ட மேளம்'பேரை கேட்டவுடன், கேரள மாநில பராம்பரிய செண்டை மேளம் கண்டிப்பாக நினைவுக்கு வரும்.


இதில், எந்த மாதிரியான பட்டாசு என்றால், செண்டை வாசிக்க பயன்படும் குச்சி போல உள்ள இதனை பற்ற வைத்தால், பல வண்ணங்களில் மத்தாப்பு போல வெளிச்சம் வரும்.'ஹல்க்'சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கற்பனை கதாபாத்திரம் 'ஹல்க்'. அந்த பெயரிலேயே ஜெயின்ட் சைஸ் பூச்சட்டி இது. அதிலும், சிறப்பு என்னவென்றால், முற்றிலும், பச்சை வண்ணத்தில் மாத்திரமே இது ஒளியை வெளியிடும். கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடிக்கும்.



'ஸ்பின்னர் பால்'


இந்த பட்டாசுக்கும், கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லை என்றாலும், ஸ்பின் பால் போல, தரைச்சக்கரம் வேகமாக சுற்றும். வலுவான அடித்தளம் இருந்தாலும், நீண்ட நேரம், வண்ணவண்ண பூக்களை வெளிப்படுத்தியவாறு சுற்றும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.இவை தவிர, தில்சே, டிவின் பேர்டு, கிராக்ளிங் டோரா டோரா என்று பல்வேறு பேன்ஸி ரக பட்டாசுகள், திருப்பூரிலுள்ள பெரிய பட்டாசு கடைகளில் கிடைக்கின்றன. இதிலும், 100, 240 என வானில் சென்று வர்ணஜாலம் நிகழ்த்தும் 'ஜம்போ சைஸ்' வாண வேடிக்கைளும் ஏராளம் உண்டு.



கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், இந்தாண்டு தீபாவளி கடந்த ஆண்டை விட களைகட்டும் என்று பட்டாசு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து பட்டாசு விற்பனையாளர் முருகேசன் கூறுகையில், ''இந்தாண்டு ஏராளமான பேன்ஸி ரக பட்டாசு வந்துள்ளன.மழை பெய்வதால், வியாபாரம் மந்தமாக உள்ளது. நாளையும் (இன்று), மறுநாளும் (நாளை) வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X