சென்னை 'உஷ்ஷ்ஷ்!': கிடைக்காது ஆயிரம் ரூபாய்!

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (82) | |
Advertisement
கிடைக்காது ஆயிரம்!தமிழகத்தில் ஓட்டு வங்கி அரசியல் நடப்பதால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, நிவாரண தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவை, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த கார்டை, அரசு உயரதிகாரிகள் முதல், கடை நிலை ஊழியர்கள் வரை வைத்திருக்கின்றனர்.சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய்
Rs 1000, Ration Card, Women, Poll Promise


கிடைக்காது ஆயிரம்!


தமிழகத்தில் ஓட்டு வங்கி அரசியல் நடப்பதால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி, நிவாரண தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவை, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த கார்டை, அரசு உயரதிகாரிகள் முதல், கடை நிலை ஊழியர்கள் வரை வைத்திருக்கின்றனர்.

சட்டசபை தேர்தலின் போது, 'ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அக்கட்சி ஆட்சிக்கு வர இது அதிகம் உதவியது. ஆட்சியை பிடித்த நிலையில், பெண்கள் தரப்பில் இருந்து மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. தகுதியான பயனாளிகளை கண்டறிந்து செயல்படுத்தப்படும் என, அரசின் தரப்பில் கூறப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில், அந்த தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கிடையாது என, அதிரடியாக சொல்லப்பட்டுள்ளது. இதனால், மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமும், அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பின்னணியில் எம்.எல்.ஏ.,


மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், கடந்த மாதம் 29ம் தேதி ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனையை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி, கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வரியை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

வெங்கடேஸ்வரி நேர்மையாக பணியாற்றி உள்ளார். அப்பகுதி ஆளுங் கட்சி எம்.எல்.ஏ., மருத்துவமனையில் தன் ஆதரவாளர் 'கேன்டீன்' நடத்த அனுமதி கேட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, வெங்கடேஸ்வரி மறுத்துள்ளார்.அதேபோல், வேறு பல பணிகளுக்கும் அவர் உடன்படவில்லை. உயர் அதிகாரிகள் கூறியும், விதிகளுக்கு புறம்பாக நடக்க அவர் முன்வரவில்லை. இதன் காரணமாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என, டாக்டர்கள் மட்டுமின்றி, மருத்துவமனை ஊழியர்களும் கூறுகின்றனர்.


latest tamil news
சங்க பணம் போனது எங்கே?


ஐ.என்.டி.யு.சி.,யின் சென்னை துறைமுக கப்பல் கூட தொழிலாளர் சங்கத் தலைவர் பதவியில் நீண்ட காலமாக, காங்கிரஸ் 'மாஜி' எம்.எல்.ஏ., காளன் இருந்தார். அவரது மறைவுக்கு பின், அச்சங்கத் தலைவராக பலராமன் பொறுப்பேற்றார்.காளன் உயிரோடு இருந்த போது, திருவல்லிக்கேணியில் இருந்த சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தில், அம்பத்துார் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில், 1 கோடியே 31 லட்சம் 'டிபாசிட்' செய்யப்பட்டு உள்ளது. அப்பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் சேர்த்து, ராயபுரத்தில் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வாங்கும் திட்டம் இருந்தது.

சமீபத்தில், வங்கியிலிருந்து சில லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அப்பணம் எதற்கு எடுக்கப்பட்டது என்பதற்கு முறையான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், சங்க நிர்வாகிகள் இருவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் மூத்த நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும், வங்கி அதிகாரி மீதும், மண்டல மேலாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பணப் புகார் விவகாரம், அச்சங்க நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் விசாரணைக்கு பின், உண்மை நிலை தெரியவரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
03-நவ-202122:41:15 IST Report Abuse
BASKAR TETCHANA விடியல் ஆட்சியின் மகிமை.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
03-நவ-202120:30:17 IST Report Abuse
Dhurvesh வாக்கு சதவீதம் ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 49%, பாஜக 28%, ராஜஸ்தானில் காங்கிரஸ் 37%, பாஜக 18%, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 57%, பாஜக 36% சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் அதன் உள் பிரச்சினைகளை சரி செய்தால் 2022 சட்டசபை தேர்தலுக்கு முன் பெரும் வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். உடனே பெட்ரோல் DESEL விலை குறைப்பு அடக்கிய வாக்காளர்களுக்கு நன்றி
Rate this:
Cancel
03-நவ-202119:51:44 IST Report Abuse
Dhandapani R வெட்கம் கெட்ட ஜென்மங்கள் ஒருத்தன் டீவி கொடுத்து ஓட்டுவாங்கினான் அடுத்து மிக்சியில் விழுந்தது ஓட்டு அதற்கு அடுத்து ஸ்கூட்டருக்கு இப்ப மாதம் ஆயிரம் ரூபாய்க்கு இதுக்கு முட்டுகுடுக்காரான்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
03-நவ-202120:27:04 IST Report Abuse
Dhurveshதீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-நவ-202121:18:55 IST Report Abuse
Kasimani Baskaran"கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டுள்ளது" - தன்பங்குக்கு மாநில அரசு மேலும் விலையை குறைக்காமல் மத்திய அரசு கொடுக்கும் விலைகுறைப்புக்கு மாநில அரசு லேபல் ஒட்டுவது கேவலம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X