உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
என்.பாடலீஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் மொழியை வைத்து அரசியல் செய்வது பெரும்பாலும் இல்லை.திராவிட அரசியல்வாதிகள் பலர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அவர்களின் பள்ளியில், தமிழக பாடத் திட்டம் செயல்படுத்துவதில்லை.
ஹிந்தி உட்பட பல்வேறு சிறப்பு வாய்ப்புகளை வழங்கும் நவோதயா பள்ளிகளை, தமிழகத்தில் திறக்க விடாமல், திராவிட ஆட்சியாளர்கள் எதிர்ப்பது ஏன் என, தமிழக மக்கள் சிந்திப்பது இல்லை. காங்கிரஸ், பா.ஜ., மற்றும் கம்யூ., ஆளும் மாநிலங்களில் எல்லாம், நவோதயா பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் அது இல்லையே ஏன்?
திராவிட அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர், வசதியானவர்கள். அதனால் அவர்களின் குழந்தைகளுக்கு ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பு, ஏழை மாணவர்களுக்கு கிடைத்து விட்டால், அரசியல்வாதிகளின் பிழைப்பு என்னாவது? அதனால் தான், ஹிந்தி கூடாது என ஒற்றைக் காலில் நின்று போராடுகின்றனர்.

வசதியானோர் மற்றும் திராவிட அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தான் ஹிந்தி படிக்க வேண்டும். நம் பிள்ளைகள் அம்மொழியை படிக்கக் கூடாது என்பதில், அவர்கள் உறுதியாக நின்று, அதில் வெற்றி பெற்றுள்ளனர்.திராவிட அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை அறியாமல், நாம் தான் அவர்களின் மேடை பேச்சுக்கு மயங்கி, நம் பிள்ளைகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கி வருகிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE