
அவரது கடிதம்:தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த, 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். அதன் வாயிலாக, நம் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும் என நம்பினோம்.
ஆனால், வன்னியர் சமுதாய மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக காத்திருந்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறீர்கள். சமூக நீதிக்காக போராடி வரும் நமக்கு இது பெரும் பின்னடைவு தான். ஆனால், இதிலிருந்து மீண்டு இன்னும் பிரமாண்டமாக எழுச்சி பெரும் வலிமையும், திறனும் நமக்கு உண்டு.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எண்ணி, நீங்கள் கலங்க வேண்டாம். உங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டியது என் கடமை.அதை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்; வன்னியர் இடஒதுக்கீட்டை மீட்டெடுப்போம். கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும்; நீதி வெல்லும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE