ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, போலீஸ் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. ஊக்கத்தொகைஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பயங்கரவாத குழுக்களால் இழைக்கப்படும் குற்றங்கள், பயங்கரவாத குழுக்களுக்கான
SIA, terrorism, Jammu and Kashmir, new agency, cases

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, போலீஸ் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.



ஊக்கத்தொகை


ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பயங்கரவாத குழுக்களால் இழைக்கப்படும் குற்றங்கள், பயங்கரவாத குழுக்களுக்கான நிதி உதவி அளிப்பது, பொய் பிரசாரங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பயங்கர வாதம் தொடர்புடைய குற்றங்களை விரைவாக விசாரித்து, தண்டனை பெற்று தர, மாநில விசாரணை முகமை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு போலீஸ் துறைக்கு உள்ளேயே தனி அமைப்பாக செயல்படும். இதற்கென தனி இயக்குனர் நியமிக்கப்படுவார். இந்த விசாரணை அமைப்பு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட இதர மத்திய விசாரணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.இந்த அமைப்பில் பணியாற்றும் போலீசாருக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.


latest tamil news





அதிகாரம்


போலீஸ் ஸ்டேஷன்களில் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பான புகார்கள் பதிவு செய்யப் படும் போது, அது குறித்து மாநில விசாரணை அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். என்.ஐ.ஏ., விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத வழக்குகளை, மாநில விசாரணை அமைப்பிடம் வழங்குவது குறித்து டி.ஜி.பி., முடிவு செய்ய வேண்டும். அதில் மாற்று கருத்து இருந்தால், அது குறித்து எழுத்துப் பூர்வமான விளக்கத்தை டி.ஜி.பி., அளிக்க வேண்டும்.

பட்டியலிடப்பட்ட குற்றங்கள் குறித்து மாநில விசாரணை அமைப்பு தானாகவே வழக்கு பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது. இது குறித்து டி.ஜி.பி.,க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
03-நவ-202108:00:35 IST Report Abuse
RajanRajan சுழற்றுங்கள் சாட்டையை. தீவிரவாதிகளை பொசுக்குங்கள். பூர்விக பண்டிட்களின் ராஜ்யமாக கஸ்மீர் உதயமாகட்டும்...வாழ்த்துகள் ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-நவ-202106:35:51 IST Report Abuse
Kasimani Baskaran நடைமுறைகளை எளிமைப்படுத்தி துப்பாக்கி தூக்கினால், குண்டு வைத்தால் அவர்களை நேரடியாக பரலோகம் அனுப்ப வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X