இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மெய்நிகர் நாணயங்களில் முதலீடு

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (9)
Advertisement
புதுடில்லி : இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் செய்யப்படும் முதலீடும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் மெய்நிகர் நாணயங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 6,922 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாயை


புதுடில்லி : இந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் செய்யப்படும் முதலீடும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.latest tamil newsஇந்தியாவில், மெய்நிகர் நாணயங்களில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் மெய்நிகர் நாணயங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 6,922 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

மெய்நிகர் நாணய ஆராய்ச்சி நிறுவனமான 'கிரிபேகோ' மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் சோகானி கூறியதாவது:இந்தியாவில் 10.5 கோடி பேர் அல்லது இந்திய மக்கள் தொகையில் 7.90 சதவீதம் பேர், இத்தகைய 'டிஜிட்டல் டோக்கன்'களில் முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர்.


latest tamil news
இம்முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், அதிகமான பேர் முதலீடு செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.மெய்நிகர் நாணயங்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம், மெய்நிகர் நாணய 'எக்ஸ்சேஞ்ச்'களில், எஸ்.ஐ.பி., வசதி மற்றும் 'பிக்ஸட் டிபாசிட்' திட்டங்கள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டதாகும்.

இருப்பினும், இந்தியாவில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இத்தகைய முதலீடுகள் முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
03-நவ-202117:40:11 IST Report Abuse
DVRR இவ்வளவு தானா நான் கூட 75 லட்சம் கோடி என்று ஒரு நிமிடம் நினைத்து விட்டேன்
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
03-நவ-202111:11:29 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan நேற்றுதான் க்ரிப்டோ கரன்ஸி பற்றி ஒரு விரிவான, விளக்கமான, எளிமையான ஆங்கில கட்டுரை படித்தேன். க்ரிப்டோ கரன்ஸி இஸ் ஹியர் டு ஸ்டே. இன்று க்ரிப்டோ கரன்ஸி தீவிரவாதம், போதை கடத்தல், பொருளாதார குற்றங்கள், சட்டவிரோத பண பரிமாற்றங்கள் ஆகியவற்றிற்கு அதிகம் பயன்படுகிறது. விரைவில் சட்டபூர்வ அங்கீகாரம், நேரடி அரசாங்க வரைமுறைகள் அமலுக்கு வரும். அதன் பின்னர் இந்தியாவும் க்ரிப்டோ கரன்ஸியை அங்கீகரிக்கும். நீங்கள் நேர்மையாக சம்பாதித்த பணத்தை ஒருசில சதவிகிதத்தை மட்டும் க்ரிப்டோ-கரன்சியில் (அளவோடு) முதலீடு செய்யலாம். பேராசையை கண்டிப்பாக தவிர்க்கவும்.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
03-நவ-202117:42:17 IST Report Abuse
DVRR1 க்ரிப்டோ கரென்சி ரூ 47.08 லட்சம்????????...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-நவ-202111:11:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம். Crypto currency is the 21st century pyramid fraud. If they stop buying it, it will go to the dogs....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-நவ-202111:12:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்PLEASE DON'T REPEAT THE SAME COMMENT...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-நவ-202111:12:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இவரு வாங்கியிருக்காராம்.. அதை சுத்தி வளைச்சி சொல்றாரு. Cryptocurrency is the 21st century version of pyramid scheme fra-ud. It is not sustainable and will go to dust....
Rate this:
Cancel
Gs nathan - Chennai,இந்தியா
03-நவ-202110:32:21 IST Report Abuse
Gs nathan இந்த நாணயத்து மதிப்பு எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? இந்த நாணயத்தின் பொறுப்பாளர் யார்? எந்த நாட்டு வங்கியின் கீழ் இதன் மதிப்பு வருகிறது? எதுவும் யாருக்கும் தெரியாது, இது ஒரு நவீன காலத்து ஏமாறும் வேலை, இதில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது, நீங்கள் ஏமாற்றபட்டாலும் யாரிடமும் எந்த நாட்டிலும் புகார் அளிக்கமுடியாது, இந்த நாணயத்துக்கான சட்ட வரையறு எந்த நாட்டிலும் கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X