இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: ஆம்புலன்சில் ஒரு கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா கடத்தல்

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
தேசிய நிகழ்வுகள்:'பைக்' திருடிய 4 பேர் கைதுபுனே: மஹாராஷ்டிராவின் புனேவில் 'பைக்' திருட்டுகள் அதிகரித்து வந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருடிய 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.லாரி மோதி 6 பேர் பலிகாசிபூர்:
city crime, arrest, murder, theft


தேசிய நிகழ்வுகள்:
'பைக்' திருடிய 4 பேர் கைதுபுனே: மஹாராஷ்டிராவின் புனேவில் 'பைக்' திருட்டுகள் அதிகரித்து வந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருடிய 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.


லாரி மோதி 6 பேர் பலிகாசிபூர்: உத்தர பிரதேசத்தின் காஸிபூர் மாவட்டத்தில் உள்ள சாலையோர கடையில், நேற்று காலை சிலர் தேனீர் குடித்துக்கொண்டு இருந்தனர். அதிவேகத்தில் வந்த லாரி கடைக்குள் புகுந்ததில் ஒரு இளம்பெண் உட்பட ஆறு பேர் பலியாயினர். பொதுமக்களால் சரமாரியாக தாக்கப்பட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


கோஹ்லி மகளுக்கு மிரட்டல்புதுடில்லி:இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, போலீசாருக்கு டில்லி பெண்கள் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், இந்தியா - பாக்., கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான, 'டி - 20' போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் பாக்.,கிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள், கேப்டன் விராட் கோஹ்லிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்தனர்.பிறந்து ஒன்பது மாதங்களே ஆன கோஹ்லியின் மகள் குறித்து வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான கருத்துகள், 'ஆன்லைன்' வாயிலாக பரப்பப்பட்டதோடு, பாலியல் பலாத்கார மிரட்டலும் விடுக்கப் பட்டன. இது குறித்து டில்லி பெண்கள் கமிஷன் தலைவர் மலிவால், போலீசாருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.

அதன் விபரம்: கோஹ்லி மகளுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விபரம், குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களை கைது செய்யவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை 8ம் தேதிக்குள் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


அஜித் பவாரின் ரூ.1,4௦௦ கோடி சொத்து முடக்கம்மும்பை : வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு சொந்தமான, 1,4௦௦ கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.


ஸ்வப்னா சுரேஷுக்கு 'ஜாமின்'கொச்சி: வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு, கேரள உயர் நீதிமன்றம் 'ஜாமின்' வழங்கியது.


நீர்மூழ்கி கப்பல் தகவல் பகிர்வு: ஆறு பேர் மீது குற்றப்பத்திரிகைபுதுடில்லி : கடற்படை நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை பிற நபர்களிடம் பகிர்ந்த வழக்கில், கடற்படை அதிகாரிகள் உட்பட ஆறு பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்திய கடற்படையில் 'கிலோ கிளாஸ்' நீர்மூழ்கி கப்பல் பயன்பாட்டில் உள்ளது. இந்த கப்பல் குறித்த ரகசிய தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்பட்டதாக உயர்மட்டத்தில் தகவல் கசிந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் ரகசிய விசாரணையைத் துவங்கினர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் ரன்தீப் சிங் மற்றும் எஸ்.ஜே.சிங் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அத்துடன் ரன்தீப் சிங் வசம் இருந்து, 2 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் நடந்த விசாரணை அடிப்படையில் கடற்படை தலைமை அலுவலக கமாண்டர் அஜித் குமார் பாண்டே உட்பட இருவர் கைதாயினர்.

இவர்கள் இருவரும் இந்த ஆண்டு துவக்கத்தில் நம் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றபின் கொரிய நிறுவனத்தில் பணியாற்றிய எஸ்.ஜே.சிங்கிடம் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை பகிர்ந்தது உறுதியானது. வழக்கு தொடர்பாக இரு கடற்படை அதிகாரிகள், இரு ஓய்வு பெற்ற அதிகாரிகள் உட்பட ஆறு பேர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 13 வயது சிறுவன்ஐதராபாத்: தன்னுடன் படிக்கும் மாணவனை மிரட்டி, வீட்டிலிருந்து 5 லட்சம் ரூபாயை திருட வைத்த 13வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த ஒருவர், பழைய வாகனங்களை விற்கும் தொழில் செய்து வருகிறார்.வாகனம் விற்ற வகையில் கிடைத்த 5 லட்சம் ரூபாயை, தன் வீட்டு அலமாரியில் வைத்திருந்தார்.இரண்டு நாட்களுக்கு பின், அலமாரியை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த பணத்தைக் காணவில்லை. இது குறித்து, தன் 13 வயது மகனிடம் விசாரித்தார். சரியாக பதில் சொல்லாததால் கோபம் அடைந்து, மகனைஅடித்தார். அப்போது அந்தசிறுவன், 'என்னுடன் படிக்கும் மாணவன் ஒருவன், என் புத்தகங்களை பறித்து விட்டான். வீட்டிலிருந்து 5 லட்சம் ரூபாயை எடுத்து வந்து தந்தால் தான், புத்தகங்களை தருவேன் என மிரட்டினான். 'இதனால் வீட்டிலிருந்த 5 லட்சம் ரூபாயை திருடி அவனிடம் கொடுத்தேன்' என்றான்.

அதிர்ச்சியடைந்த தந்தை, இது குறித்துபோலீசில் புகார் செய்தார். பணம் கேட்டு மிரட்டிய 13 வயது மாணவனிடம், அவனது குடும்பத்தார் முன்னிலையில் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், மாணவனை மிரட்டிப் பெற்ற 5 லட்சம் ரூபாயை, தன் தாய் மற்றும் மாமாவிடம் கொடுத்ததை சிறுவன் ஒப்புக் கொண்டான். இதையடுத்து, பணத்தைக் கேட்டு மிரட்டியதாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவனது தாய் மற்றும் மாமா மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாயை மீட்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news

தமிழக நிகழ்வுகள்:
ஆம்புலன்சில் ஒரு கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சா கடத்தல்தஞ்சாவூர்: ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


latest tamil news
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்ததுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி ப்ரவேஷ் குமார் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


latest tamil news
இந்நிலையில் நாகையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 200 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலலீசார் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த நாகையைச் சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மார்சல் டெரன்ஸ் ராஜாவை விசாரணை செய்ததில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக தெரிவித்தார். ஆந்திராவில் இருந்து நாகை வழியாக படகில் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 1 கோடி எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும் போலீசார் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விபத்தில் 2 பெண்கள் பலிபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே மோகனுார் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன், 44; மனைவி சித்ரா, 36. இவரது உறவினர் லட்சுமி, 37. மூவரும் நேற்று காலை ஒரே 'ஸ்கூட்டி'யில் தீபாவளிக்காக பொருட்கள் வாங்க, கந்தர்வக்கோட்டை நோக்கி சென்றனர். ஸ்கூட்டியை சுப்பிரமணியன் ஓட்டியுள்ளார். மட்டங்கால் பகுதியில் எதிரே வந்த வேன் மீது ஸ்கூட்டி மோதியது. சித்ரா, லட்சுமி உயிரிழந்தனர். சுப்பிரமணியன் படுகாயம் அடைந்தார்.


தலைமை செயலக வளாகத்தில் மரம் விழுந்து பெண் போலீஸ் பலிசென்னை: சென்னையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், தலைமை செயலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் கவிதா (45) பரிதாபமாக இறந்தார்; இருவர் காயமடைந்தனர். பலியான பெண் போலீஸ் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.


ரூ.110 கோடிக்கு விற்க முயன்ற தொன்மையான சிலைகள் மீட்புசென்னை: தொன்மை வாய்ந்த சிலைகளை திருடி, வெளிநாடுகளுக்கு விற்க முயன்ற இருவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கோடி ரூபாய்க்கு விற்க முற்பட்ட மூன்று சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.


சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை உட்பட இருவர் கைதுராமநாதபுரம்: மகளை பலாத்காரம் செய்த தந்தை, பூஜாரியை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 43 வயது நபர், தன் 16 வயது மகளை பல முறை பலாத்காரம் செய்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிஉள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமியை அவரது தாய், பூஜாரி சிவகுமார், 47 என்பவரிடம் கடந்த மாதம் அழைத்து சென்றார்.அங்கு சிறுமியை மட்டும் இரவில் தங்க வைத்த பூஜாரி சிவகுமார், அவரை பலாத்காரம் செய்து தாக்கினார்.

இந்நிலையில், அவரது தந்தை மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், போலீஸ் உதவி எண் 1098க்கு சிறுமி புகார் தெரிவித்தார். ராமநாதபுரம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் தந்தை, சிவகுமாரை கைது செய்தனர்.


ரூ.5,000 லஞ்சம்: ஆர்.ஐ., கைதுதிருச்செங்கோடு: நில சீர்திருத்தம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் பூவிழி ராஜா, 34. இவர் நிலச் சீர்திருத்தம் செய்வதற்காக, எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன், 48, என்பவரை அணுகிஉள்ளார். அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில், பூவிழி ராஜா புகார் செய்தார்.நேற்று முன்தினம் இரவு, தாலுகா அலுவலகத்தில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பரமேஸ்வரனிடம், பூவிழி ராஜா கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், பரமேஸ்வரனை கைது செய்தனர்.


பட்டாசு கடை உரிமையாளர் கைதுசங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகணபதி, 47; சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். தீபாவளியை முன்னிட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை, கடையின் குடோனில் வைத்திருந்தார்.கடந்த 26ம் தேதி மாலை மின்கசிவு காரணமாக தீ பிடித்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் எட்டு பேர் இறந்தனர். செல்வகணபதி உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து வந்த செல்வகணபதியை போலீசார் கைது செய்தனர்.


பஸ்சில் வந்த பெண்ணிடம் ரூ. 4 லட்சம் நகை திருட்டுகடலுார்: பஸ்சில் வந்த பெண்ணிடம் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை, கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அருள்ஜோதி மனைவி அருணாதேவி, 39; இவர், கடந்த 29ம் தேதி, சேலத்தில் இருந்து கடலுாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அரசு பஸ்சில் வந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகத்தில், பஸ்சில் ஏறிய இரண்டு பெண்கள், அருணாதேவி அருகில் அமர்ந்தனர். ஒரு பெண் சில்லரை காசை கீழே போட்டு, அதனை எடுக்குமாறு கூறினார். அருணாதேவி குனிந்து எடுத்த போது, அவர் வைத்திருந்த நகை பையை எடுத்துக் கொண்டு, இருவரும் எலவனாசூர்கோட்டையில் இறங்கினர்.பின், கடலுார் வந்து பார்த்தபோது, 14 சவரன் நகை வைத்திருந்த தனது பையை காணவில்லை. நகையின் மதிப்பு ரூ. 4 லட்சம். இது குறித்த புகாரின் பேரில் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.


உலக நிகழ்வுகள்:
ஆப்கன் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு; 19 பேர் பலிகாபூல்:ஆப்கானிஸ்தானில் ராணுவ மருத்துவமனையில் குண்டு வெடித்ததில் 19 பேர் பலியாகினர்.

தெற்காசிய நாடான ஆப்கனின் தலைநகர் காபூலில் ராணுவ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நாட்டு போரில் படுகாயம் அடைந்த ஏராளமான ஆப்கன் ராணுவ வீரர்களும், தலிபான்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவ மருத்துவமனையின் நுழைவு வாயிலில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குள் தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 19 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-நவ-202104:19:23 IST Report Abuse
Mani . V "தஞ்சாவூர்: ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்....." விடியலின் சாதனையோ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
03-நவ-202117:34:21 IST Report Abuse
DVRR ஊரை பாருங்க நம்மூர் தானே இந்த மடியல் அரசில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X