தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி| Dinamalar

தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (29) | |
புதுடில்லி: ஐ.நா.வின் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி. முன்னதாக கிளாஸ்கோ விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினருடன் உற்சாகமாக உரையாடினார்.இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
PMModi, Returns, India, After Concluding, Visit, Rome, Italy, Vatican City, Glasgow, Scotland, பிரதமர், மோடி, இந்தியா, ஸ்காட்லாந்து, கிளாஸ்கோ, வாடிகன் சிட்டி, ரோம்

புதுடில்லி: ஐ.நா.வின் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி. முன்னதாக கிளாஸ்கோ விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினருடன் உற்சாகமாக உரையாடினார்.

இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். ஜி-20 மாநாட்டை முடித்துவிட்டு வாடிகன் சிட்டி சென்ற பிரதமர் மோடி, போப்பை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐ.நா.,வின் பருவநிலை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அதில், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி பேசினார்.


latest tamil news


பருவநிலை மாநாட்டை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடியை காண கிளாஸ்கோ விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் திரண்டிருந்தனர். இதனை கண்ட மோடி, குழந்தைகள் மற்றும் பெண்களுடன் உரையாடினார். மேலும், அங்கிருந்தவர்களுடன் முரசு அறைந்து உற்சாகத்தை பகிர்ந்துக்கொண்டார். அதன்பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டில்லி விமான நிலையம் வந்தடைந்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X