தொடர்மழை, தீபாவளி பண்டிகையால் எகிறிய மல்லிகை விலை; கிலோ ரூ.2000க்கு விற்பனை

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (2)
Advertisement
மதுரை: தொடர்மழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2000க்கு விற்பனையாகியுள்ளது.தமிழகம் முழுவதும் தொடர் கனமழை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. மதுரை பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் மல்லிகை பூக்களின் விலையும் அதிரடியாக
மல்லிகை, விலை, உயர்வு, பூ, மதுரை, தீபாவளி, தொடர் மழை

மதுரை: தொடர்மழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2000க்கு விற்பனையாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் தொடர் கனமழை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. மதுரை பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் மல்லிகை பூக்களின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இருந்து மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்ட வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்வது வழக்கம்.


மதுரையில் மல்லி விலை 3 மடங்கு விலை உயர்வு! வரத்து குறைந்தாலும் விற்பனை அமோகம் | Madurai Coriander | Flower | Dinamalar

latest tamil news



அப்படி இருக்கையில், கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.800 ஆக விற்கப்பட்டது. தொடர் மழையால் பூக்கள் வரத்து குறைந்தது. வழக்கமாக 5 டன் மல்லிகை பூ, மார்க்கெட்டிற்கு வரும் நிலையில் ஒரு டன் வரை மட்டுமே வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டும் மல்லிகை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
03-நவ-202114:22:12 IST Report Abuse
Visu Iyer சேலையை மறந்து சுடிதார் அணியும் இன்றைய நாகரீக பெண்கள், தலையை வாரி முடிப்பதில்லை.. இவர்களுக்கு எதுக்கு மல்லி கை என விலை உயர்ந்து விட்டதோ
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-நவ-202113:13:13 IST Report Abuse
raja விடியல் அரசின் சாதனைகளில் ஓன்று....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X