ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையே நேரடி விமான சேவை: வான்வெளியை அனுமதிக்க பாக்., மறுப்பு

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவைக்கு, பாகிஸ்தான் வான்வெளியை அனுமதிக்க அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.கடந்த மாதம் காஷ்மீர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். குறைந்த கட்டணத்தில் செயல்படும் இந்த விமான சேவையை கோ பர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் நடத்தி வந்தது. கடந்த அக்.,23ல் முதல்
ஸ்ரீநகர், ஷார்ஜா, நேரடி விமான சேவை, வான்வெளி, பாக்., மறுப்பு

புதுடில்லி: ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவைக்கு, பாகிஸ்தான் வான்வெளியை அனுமதிக்க அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.

கடந்த மாதம் காஷ்மீர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். குறைந்த கட்டணத்தில் செயல்படும் இந்த விமான சேவையை கோ பர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் நடத்தி வந்தது. கடந்த அக்.,23ல் முதல் விமானம் கிளம்பி சென்றது. ஆனால், இந்த விமானத்தை, தங்கள் நாட்டு வான்வெளியில் பயணிக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.

மாற்று வழியில் விமானத்தை இயக்க வேண்டும் என்றால், அதற்கு கூடுதல் நேரம் ஆகும் என்பதுடன், எரிபொருள் மற்றும் கட்டண செலவுகளும் அதிகரிக்கும். பாகிஸ்தான் அனுமதி மறுப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் விமானபோக்குவரத்து அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




அதேபோல், கடந்த 2009 ம் ஆண்டு ஸ்ரீநகர் - துபாய் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானத்தையும், பாகிஸ்தான் வெளியை பயன்படுத்த, அந்நாடு அனுமதிக்கவில்லை. இதனால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
04-நவ-202109:51:31 IST Report Abuse
Kumar அதுக்குள்ள இங்கே உள்ள ஒரு டிவில இந்தியா ,ஷார்ஜா இடையேனு சொல்கிறார்கள். இரண்டு முனையிலும் விமானம் போனா அவர்கள் தங்கம் தான் கடத்துவார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
04-நவ-202105:54:17 IST Report Abuse
Prasanna Krishnan வானம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?
Rate this:
Cancel
03-நவ-202119:50:53 IST Report Abuse
சம்பத் குமார் 1). அங்கே இருக்கும் உள்நாட்டு கலவரத்தை திசை திருப்ப பாகிஸ்தான் நடத்தும் நாடகம். 2). முஸ்லிம் நாடுகளின் காவல் போல் செயல்பட்டு அதற்கு பிரதி உபகாராமாக சம்பளம் வாங்கி கொள்வது பாகிஸ்தான் வேலை.3).அவர்களை முதலில் கேட்டு அனுமதி பெற்று இருந்தால் சரி என்று சோல்லி இருப்பார்கள்.4). காஷ்மீர் மக்கள் சந்தோஷமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு தூக்கம் வராது. 5). கேட்டு பார்க்க வேண்டியது இல்லையெனில் பாகிஸ்தான் விமானங்கள் பங்களாதேஷ் மலேஷியா செல்ல நம் வான்வழியை பயன்படுத்த கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டியதுதான். 6). எப்படி தங்கள் சகோதரர்களுக்கு கூச்சம் இல்லாமல் துரோகம் செய்கிறார்கள். 7). பிரத்தியேகமாக தனியாக மூளை இவர்களுக்கு இருக்குமா???ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி???. நன்றி ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X