ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையே நேரடி விமான சேவை: வான்வெளியை அனுமதிக்க பாக்., மறுப்பு| Dinamalar

ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையே நேரடி விமான சேவை: வான்வெளியை அனுமதிக்க பாக்., மறுப்பு

Updated : நவ 03, 2021 | Added : நவ 03, 2021 | கருத்துகள் (10) | |
புதுடில்லி: ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவைக்கு, பாகிஸ்தான் வான்வெளியை அனுமதிக்க அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.கடந்த மாதம் காஷ்மீர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். குறைந்த கட்டணத்தில் செயல்படும் இந்த விமான சேவையை கோ பர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் நடத்தி வந்தது. கடந்த அக்.,23ல் முதல்
ஸ்ரீநகர், ஷார்ஜா, நேரடி விமான சேவை, வான்வெளி, பாக்., மறுப்பு

புதுடில்லி: ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவைக்கு, பாகிஸ்தான் வான்வெளியை அனுமதிக்க அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.

கடந்த மாதம் காஷ்மீர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவையை துவக்கி வைத்தார். குறைந்த கட்டணத்தில் செயல்படும் இந்த விமான சேவையை கோ பர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் நடத்தி வந்தது. கடந்த அக்.,23ல் முதல் விமானம் கிளம்பி சென்றது. ஆனால், இந்த விமானத்தை, தங்கள் நாட்டு வான்வெளியில் பயணிக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.

மாற்று வழியில் விமானத்தை இயக்க வேண்டும் என்றால், அதற்கு கூடுதல் நேரம் ஆகும் என்பதுடன், எரிபொருள் மற்றும் கட்டண செலவுகளும் அதிகரிக்கும். பாகிஸ்தான் அனுமதி மறுப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் விமானபோக்குவரத்து அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




அதேபோல், கடந்த 2009 ம் ஆண்டு ஸ்ரீநகர் - துபாய் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானத்தையும், பாகிஸ்தான் வெளியை பயன்படுத்த, அந்நாடு அனுமதிக்கவில்லை. இதனால், அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X